தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் திருவாரூரில் தேர்தல் பிரச்சார்த்தைத் தொடங்கினார். அதேபோல, முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தேனியிலும் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கினர்.
மக்களவைத் தேர்தல் தேதி நெருங்கிவரும் நிலையில், வேட்பாளர்கள் பெயர்களை தி.மு.கவும் அ.தி.மு.க ஒரே நேரத்தில் வெளியிட்டன. அதேபோல, நேற்று ஒரே நாளில் இரு கட்சிகளும் தேர்தல் அறிக்கையை வெளியிட்டன. நேற்று இரு பெரும் கட்சிகளும் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட நிலையில் இரண்டு கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளன.

ஓ.பன்னீர்செல்வம்
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவருடயை தந்தையும் தி.மு.க முன்னாள் தலைவருமான கருணாநிதியின் சொந்த ஊரிலிருந்து பிரச்சார்தைத் தொடர்ந்துள்ளார். காலை, 6.30 மணி அளவிலேயே அவர் பிரச்சாரத்தைத் தொடங்கினார். திருவாரூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் பூண்டி கலைவாணனை ஆதரித்தும் மதச்சார்பற்ற கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்தும் மு.க.ஸ்டாலின் பிரச்சாரத்தைத் தொடங்கினார்.
காலை முதலே வீடு வீடாகச் சென்று வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். தேர்தல் பிரச்சாரத்தின்போது சிறுமிகளுடன் மு.க.ஸ்டாலின் செல்பி எடுத்துக்கொண்டார். அதேபோல, முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் நடைபெற்ற அ.தி.மு.க செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளார். அந்தக் கூட்டத்துக்குப் பிறகு தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கினார்.
அதேபோல, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தேனி மாவட்டத்தில் அவரது மகன் ரவிந்திரநாத்தை ஆதரித்து பிரச்சாரத்தைத் தொடங்கினார். முன்னதாக, காலையில் தேனி எல்லையிலுள்ள திருமலை மஞ்சமலை அய்யனார் கோயிலுக்கு மகனுடன் சென்று வழிபட்ட ஓ.பன்னீர்செல்வம், அங்கிருந்து தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கினார். அதேபோல, தென் சென்னைப் பகுதியில் தி.மு.க வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கினார்.
Also see:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.