ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

உட்கட்சி தேர்தல் : திமுக தலைவர் மு.க ஸ்டாலின் இன்று ஆலோசனை

உட்கட்சி தேர்தல் : திமுக தலைவர் மு.க ஸ்டாலின் இன்று ஆலோசனை

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்.

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

    உட்கட்சி தேர்தல் தொடர்பாக, திமுக தலைவர் மு.க ஸ்டாலின் மாவட்ட செயலாளர்களுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

    திமுகவின் உள்கட்சி தேர்தல் வரும் 21-ஆம் தேதி முதல் பல்வேறு கட்டங்களாக நடைபெற உள்ளது. கிளைக் கழக நிர்வாகிகள், ஒன்றிய, நகர, மாநகர பகுதி தேர்தல்கள் நடத்தப்பட்ட பின்னர் மாவட்ட கழக நிர்வாகிகள், தலைமை கழக பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களை தேர்வு செய்ய தேர்தல் நடத்தப்படும். அதன்பிறகு பொதுக்குழு கூடி தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர், தணிக்கை குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

    இந்நிலையில், உட்கட்சி தேர்தல் தொடர்பாக மாவட்ட செயலாளர்களுடன் திமுக தலைவர் ஸ்டாலின் இன்று மாலை ஆலோசனை நடத்துகிறார். இதில், ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மக்கள் பிரச்னைகள் குறித்து ஸ்டாலின் கேட்டறிய உள்ளார். மேலும், விரைவில் நடைபெற உள்ள நகர்ப்புற தேர்தல் குறித்தும் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Also See...

    Published by:Gunavathy
    First published:

    Tags: DMK, M.K.Stalin