மோடி, எடப்பாடி பழனிசாமி சந்திப்பு குறித்து மு.க.ஸ்டாலின் எழுப்பும் கேள்விகள்!

சில தினங்களுக்கு முன் வெளிவந்த நீட் தேர்வு முடிவுகளால், தமிழ்நாட்டில் திருப்பூர் ரிதுஸ்ரீ, பட்டுக்கோட்டை வைஸ்யா, விழுப்புரம் மோனிசா என அடுத்தடுத்து மூன்று மாணவிகள் தற்கொலை செய்துள்ளனர்.

news18
Updated: June 16, 2019, 8:34 PM IST
மோடி, எடப்பாடி பழனிசாமி சந்திப்பு குறித்து மு.க.ஸ்டாலின் எழுப்பும் கேள்விகள்!
மு.க.ஸ்டாலின்
news18
Updated: June 16, 2019, 8:34 PM IST
தமிழ்நாட்டின் கருத்தைக் கேட்காமல் மேகதாது அணை கட்டக் கூடாது என்று பிரதமர் மோடி பங்கேற்றக் கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏன் வலியுறுத்தவில்லை என்று எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரதமர் மோடியுடனான முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு குறித்து கேள்வி எழுப்பி தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், ‘உள்ளாட்சி நிதி, பட்டியலின் மாணவர்களுக்கான மெட்ரிக்குலேசன் ஸ்காலர்ஷிப், மாநிலத்தில் செயல்படுத்தியுள்ள மத்திய அரசு திட்டங்களுக்கான நிதி, ஜி.எஸ்.டியால் ஏற்பட்ட இழப்பீட்டுத் தொகை என சுமார் 17,350 கோடி ரூபாய் நிதியை தமிழகத்துக்கு வழங்காமல் மத்திய அரசு தொடர்ந்து வஞ்சித்து வருகிறது.

சில தினங்களுக்கு முன் வெளிவந்த நீட் தேர்வு முடிவுகளால், தமிழ்நாட்டில் திருப்பூர் ரிதுஸ்ரீ, பட்டுக்கோட்டை வைஸ்யா, விழுப்புரம் மோனிசா என அடுத்தடுத்து மூன்று மாணவிகள் தற்கொலை செய்துள்ளனர். எடப்பாடியில் பாரதப் பிரியன் என்ற மாணவன் தற்கொலை செய்துள்ளான்.

ஆனால், மோடியிடம் எடப்பாடி பழனிசாமி கொடுத்த மனுவில், தமிழ்நாட்டுக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கவேண்டும் என்று சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இரு மசோதாக்களுக்கும் உடனடியாக குடியரசுத் தலைவர் ஒப்புதலைப் பெற்றுத்தாருங்கள் என்ற வலியுறுத்தாதது வருத்தம் அளிக்கிறது. மேகதாது அணை கட்டுவது குறித்து கர்நாடக முதல்வர் அரசியல் சட்டத்துக்கு விரோதமாக கூட்டாசித் த்ததுவத்துக்கு உலை வைக்கும் விதத்தில் பேசிய பிறகும், நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்ற எடப்பாடி பழனிசாமி அதைக் கண்டிக்கவில்லை.

கேரள, புதுவை முதலமைச்சர்களுடன் கலந்து ஆலோசித்து இணைந்து ஒரு எதிர்ப்பைத் தெரிவிக்கவும் இல்லை. தமிழகத்தின் கருத்தைக் கேட்காமல் மேகதாது அணை கட்ட அனுமதிக்கக் கூடாது என்று பிரதமர் பங்கேற்ற கூட்டத்தில் வலியுறுத்தாதது ஏன்?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

Also see:

First published: June 16, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...