பொள்ளாச்சி வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயருடன் அரசாணை! மு.க.ஸ்டாலின் கண்டனம்

இதுதொடர்பாக, மாநில பெண்கள் நல வாரியம் விளக்கம் கேட்டிருந்தது. காவல்துறையின் செயலுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களைத் தெரிவித்திருந்தனர்.

news18
Updated: March 14, 2019, 8:00 PM IST
பொள்ளாச்சி வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயருடன் அரசாணை! மு.க.ஸ்டாலின் கண்டனம்
மு.க.ஸ்டாலின்
news18
Updated: March 14, 2019, 8:00 PM IST
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் பாதிக்கப்பட்ட புகார் அளித்த பெண் விவரங்களை தமிழக அரசு மீண்டும் வெளியிட்டதற்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

பொள்ளாச்சியில் சமூக வலைதளங்கள் மூலம் பெண்களிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்து, அதனை வீடியோ எடுத்து கும்பல் மிரட்டிய சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரசு வெளியிட்ட அரசாணை


இந்தச் சம்பவம் தொடர்பாக, அடுத்தடுத்து வெளியான வீடியோக்கள் தமிழகத்தில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கின் தொடக்க நிலையில், இந்த வழக்குத் தொடர்பாக முதன் முதலாக புகார் அளித்தப் பெண்ணின் பெயரையும் அவரது முகவரியையும் மாவட்டக் காவல்துறை வெளியிட்டது.

அரசாணை


பாலியல் விவகாரங்களில் பாதிக்கப்படும் பெண்களின் விவரங்களை வெளியிடக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளநிலையில், அதனை மீறும் வகையில் மாவட்டக் காவல்துறை செயல்பட்டிருந்தது.

இந்தச் செயலுக்கு கோயம்புத்தூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் மன்னிப்பு கோரியிருந்தார். இதுதொடர்பாக, மாநில பெண்கள் நல வாரியம் விளக்கம் கேட்டிருந்தது. காவல்துறையின் செயலுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களைத் தெரிவித்திருந்தனர்.
Loading...
இந்தநிலையில், இன்று பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றி மாநில உள்துறை அமைச்சகம் அரசாணை வெளியிட்டுள்ளது.

அந்த அரசாணையிலும் பாதிக்கப்பட்டு புகார் அளித்த பெண்ணின் பெயர், அவரது வீட்டின் முகவரி, அவரது சகோதரரின் பெயர் ஆகியவை இடம் பெற்றுள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவை மீறும் வகையில் தமிழக அரசு செயல்படுவதாக கடும் கண்டனங்கள் எழுகின்றன.

இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள மு.க.ஸ்டாலின், ‘பாலியல் குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்ட பெண்ணின் விவரங்களை வெளிப்படுத்தக்கூடாது என்ற உச்சநீதிமன்றத்தின் கடுமையான அறிவுறுத்தலை பொள்ளாச்சி விவகாரத்தில் மீறிவிட்டது அதிமுக அரசு! இனியாரும் புகார் கொடுக்கக்கூடாது என மிரட்டுகிறதா?  குற்றவாளிகளைக் காப்பாற்ற தொடரும் ஆளுந்தரப்பின் கபடநாடகம்’ என்று பதிவிட்டுள்ளார்.

Also see:

First published: March 14, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...