தமிழிசை வீட்டில் சோதனை நடத்துவார்களா? வருமானவரித்துறைக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி

வாக்குப் பதிவுக்கு ஒரு நாளே உள்ள நிலையில், வருமான வரித்துறை சோதனை நடைபெறுகிறது. வருமான வரித்துறை சோதனையையடுத்து, கனிமொழியின் வீட்டுக்கு வெளியே தி.மு.க தொண்டர்கள் குவிந்துள்ளனர்.

news18
Updated: April 16, 2019, 9:40 PM IST
தமிழிசை வீட்டில் சோதனை நடத்துவார்களா? வருமானவரித்துறைக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
news18
Updated: April 16, 2019, 9:40 PM IST
தி.மு.கவுக்கு களங்கம் ஏற்படுத்துவதற்கு பிரதமர் மோடி தேர்தல் ஆணையத்தை பயன்படுத்துகிறார் என்று மு.க.ஸ்டாலின் குற்றம் சுமத்தியுள்ளார்.

தூத்துக்குடி குறிஞ்சி நகரில் திமுக வேட்பாளர் கனிமொழி தங்கியிருக்கும் வீடு மற்றும் அலுவலகத்தில் 10 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் குழு சோதனை நடத்தி வருகின்றனர்.

வாக்குப் பதிவுக்கு ஒரு நாளே உள்ள நிலையில், வருமான வரித்துறை சோதனை நடைபெறுகிறது. வருமான வரித்துறை சோதனையையடுத்து, கனிமொழியின் வீட்டுக்கு வெளியே தி.மு.க தொண்டர்கள் குவிந்துள்ளனர்.

இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், ‘கனிமொழியின் வீட்டில் யாருடைய புகாரின் அடிப்படையில் வருமான வரித்துறை சோதனை நடைபெறுகிறது. நான், நேரடியாக குற்றம் சாட்டுகிறேன். தூத்துக்குடி வேட்பாளர் தமிழிசை சௌந்தர்ராஜன் வீட்டில் கோடிக்கணக்கான பணம் உள்ளது. அவரது, வீட்டில் சோதனை நடத்துவார்களா? தேனியில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ரவிந்திரநாத் வாக்காளர்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்கிறார். அவர் மீது எந்த நடவடிக்கையும் இல்லை.

தி.மு.கவுக்கு களங்கம் ஏற்படுத்துவதற்காக மோடி தேர்தல் ஆணையத்தை பயன்படுத்துகிறார். வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, தேர்தல் ஆணையத்தை மத்திய அரசு தவறாக பயன்படுத்துகிறது. தேர்தல் ஆணையத்தை சீர்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவித்தார்.
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

Also see:

First published: April 16, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...