Home /News /tamil-nadu /

சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக எம்.துரைசாமி பதவியேற்பு

சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக எம்.துரைசாமி பதவியேற்பு

நீதிபதி எம்.துரைசாமி

நீதிபதி எம்.துரைசாமி

Madras High Court | சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக துரைசாமி பொறுப்பேற்றார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த முனீஷ்வர்நாத் பண்டாரி நேற்றுடன் பணி ஓய்வு பெற்றார். இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி துரைசாமியை பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசு தலைவர் உத்தரவிட்டிருந்தார்.

    அதன்படி இன்று, நீதிபதி துரைசாமி பொறுப்பு தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார். தலைமை நீதிபதியின் நீதிமன்ற அறையில் நீதிபதி சுந்தர்மோகனுடன் இணைந்து பொதுநல வழக்குகள் உள்ளிட்ட தலைமை நீதிபதி விசாரிக்கும் வழக்குகளை விசாரிக்க துவங்கியிருக்கிறார்.

    ALSO READ | திருச்சியில் 6 கிராமங்கள் எங்களுக்கு சொந்தம்... வக்பு வாரியம் அறிவிப்பால் மக்கள் பாதிப்பு

    முந்தைய தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி, இடமாற்றம் செய்யப்பட்ட போது பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி வகித்த நீதிபதி துரைசாமி, தற்போது இரண்டாவது முறையாக பொறுப்பு தலைமை நீதிபதி பொறுப்பை ஏற்றுள்ளார். அவர், செப்டம்பர் 21ம் தேதி பணி ஓய்வு பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Published by:Anupriyam K
    First published:

    Tags: Judge

    அடுத்த செய்தி