உங்களால் முடியும் முதல்வரே !. அடித்து ஆடுங்கள் - எடப்பாடி பழனிசாமியை பாராட்டிய தாமரை!

உங்களால் முடியும் முதல்வரே !. அடித்து ஆடுங்கள் - எடப்பாடி பழனிசாமியை பாராட்டிய தாமரை!
தமிழக முதல்வர் | கவிஞர் தாமரை
  • Share this:
தமிழ்வழியில் கற்றவர்களுக்கு, அரசுப் பணிகளில் முன்னுரிமை எனும் அறிவிப்பு, விழா எடுத்துக் கொண்டாட வேண்டிய நிகழ்வு என்று கூறியிருக்கும் தாமரை, தமிழக முதலமைச்சர் அடித்து ஆடுகிறார் என்றும் பாராட்டியுள்ளார்.

தற்போது நடைபெற்று வரும் சட்டமன்றக் கூட்டத் தொடரில் பள்ளி மற்றும் பட்ட மேற்படிப்பை தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு தமிழக அரசு வேலைவாய்ப்பில் 20 % இடஒதுக்கீடு வழங்கப்படும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டது. இதை அமைச்சர் ஜெயக்குமார் நேற்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.

தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்து கவிஞர் தாமரை ஃபேஸ்புக் பதிவிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது,


அடித்து ஆடுகிறார் எடப்பாடியார். தமிழ்வழியில் கற்றவர்களுக்கு, அரசுப் பணிகளில் முன்னுரிமை எனும் அறிவிப்பு, விழா எடுத்துக் கொண்டாட வேண்டிய நிகழ்வு. தமிழ் உணர்வாளர்கள் காதுகளில் இன்பத்தேன் வந்து பாய்ந்தது இன்று.

தமிழ்நாட்டில் எங்கும் தமிழ், எதிலும் தமிழ் எனும் நிலை வர வேண்டும் !. தமிழ் மக்களுக்கான சேவைகள் அனைத்தும் முதன்மையாக தமிழில் வழங்கப்பட வேண்டும். தமிழ்நாட்டில் பிறந்து தமிழ் மட்டுமே அறிந்தவர்களுக்கு எந்த மொழிச்சிக்கலும் இல்லா வண்ணம் நடத்தப்படுவதே சிறந்த மக்களாட்சி !.

இது சிலருக்குக் கசப்பாக இருக்கக் கூடும்.'தமிழ்நாட்டில் தமிழ்' என்றுதானே கேட்கிறோம். ஆந்திராவில் தமிழ், கர்நாடகத்தில் தமிழ்,கேரளத்தில், ம.பி, உ.பி, பஞ்சாப், ஹரியானாவில் ஆட்சிமொழி தமிழென்றா கேட்கிறோம். அப்புறம் ஏன் கசக்க வேண்டும்.

வந்தாரை வாழ வைக்கும் தமிழகமே. நம் உரிமைகளை விட்டுக் கொடுத்துவிட்டு, யாரையும் வாழ வைக்க வேண்டிய அவசியம் நமக்கில்லை என அறிக. நம் மொழிப்பற்றை, மொழி வெறியாகத் திரித்தால் அது திரிப்பவர்களின் பிரச்சினை, நம் பிரச்சினையில்லை.

பி.கு : அப்படியே இந்த வங்கிப்பணி, தொடர்வண்டி சேவை, விமானநிலையம் உள்ளிட்ட அனைத்திலும் தமிழை, தமிழரை உறுதிப்படுத்துக. தமிழ்நாட்டிலிருந்து கிளம்பும்/அடையும் அனைத்து வானூர்திகளிலும் தமிழ் அறிவிப்புகள் ஒலிக்க வேண்டும். உங்களால் முடியும் முதல்வரே !. அடித்து ஆடுங்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.



மேலும் படிக்க: ரயிலில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட பெண் - அதிர்ச்சி சம்பவம்
First published: March 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading