மறைந்து நான்கு தசாப்தங்களைக் கடந்த பிறகும் வாழும் கண்ணதாசன்

தமிழ் திரையுலகில் மட்டுமல்ல, தமிழ் மக்கள் மனதிலும் அழியா இடம்பிடித்தவர் பாடலாசிரியர் கண்ணதாசன்.

மறைந்து நான்கு தசாப்தங்களைக் கடந்த பிறகும் வாழும் கண்ணதாசன்
கண்ணதாசன்
  • Share this:
மறைந்து நான்கு தசாப்தங்கள் ஆகிவிட்டாலும் தன் தமிழால் வாழ்ந்து கொண்டிருக்கும் கவிப்பேரரசு கண்ணதாசனின் 39 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. வரலாற்று கதைகளிலேயே மிகப்பெரிய தொடரான மகாபாரதத்தின் ஒட்டு மொத்த சாராம்சத்தையும் இரண்டே வரிகளில் ஒருவரால் விளக்கிச் சொல்லி விட முடியும் என்றால் அவர் பெயர் தான் கண்ணதாசன். நான்காயிரம் கவிதைகள், ஐயாயிரத்திற்கும் அதிகமான திரைப்பட பாடல்கள், தமிழக அரசின் அரசவைக் கவிஞர் என்ற கௌரவம், சாகித்திய அகாடமி விருது வென்ற படைப்பாளி என எண்ணற்ற சாதனைகளோடு இன்றும் தனது பாடல் வரிகளால் தமிழ் தமிழ் ரசிகர்களின் நெஞ்சத்தில் வாழ்ந்து வருகிறார் கண்ணதாசன்.

தமிழ் சினிமாவில் எம்ஜிஆர், சிவாஜி கணேசன் என்ற இருபெரும் நாயகர்கள் உருவாக கண்ணதாசனின் வரிகள் இன்றியமையாதது. எம்ஜிஆருக்கு நாயகன் துதிபாடும் பாடல்களை எழுதி புகழ் சேர்த்தது போலவே நடிகர் சிவாஜி கணேசனுக்கு பல தத்துவ பாடல்களை எழுதி சிவாஜிகணேசனின் நடிப்புக்கு தீனி போட்டவர் கண்ணதாசன்.

காட்டிற்கு ராஜா சிங்கம் என்றால் கவிதைக்கு ராஜா கண்ணதாசன் என்று தமிழக முன்னாள் முதலமைச்சர் காமராஜர் கண்ணதாசனை புகழும் அளவிற்கு கண்ணதாசனின் புகழ் தமிழ் திரை உலகம் கடந்து தமிழக அரசியலிலும் பிரதிபலித்தது.


மூன்றாம் பிறை திரைப்படத்தில் இடம்பிடித்த கண்ணே கலைமானே என்ற தாலாட்டு பாடலுடன் தமிழக மக்களை உறங்க வைத்துவிட்டு கண்ணதாசன் நடைபெற்று இன்றுடன் 39 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. ஆனாலும் தன் பாடல்களால் இன்றும் ரசிகர்களின் நெஞ்சத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் கண்ணதாசன்.
First published: October 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading