Home » News » Tamil-nadu » LUXARY CAR TRAVELS SCAM VJR ANB

சொகுசு கார் டிராவல்ஸ் நடத்துவதாக வங்கியில் மோசடி... தலை சுற்றவைக்கும் ப்ளான்கள், எக்ஸூக்யூட் செய்தது எப்படி?

காரை அதன் ஒரிஜினல் விலைக்கு வாங்கி சில மாதங்கள் வட்டி கட்டி விட்டு பின்பு சிம் கார்டுகளை மற்றும் வீட்டு முகவரியை மாற்றி தலைமறைவாகி மோசடி செய்து வந்துள்ளனர்.

சொகுசு கார் டிராவல்ஸ் நடத்துவதாக வங்கியில் மோசடி... தலை சுற்றவைக்கும் ப்ளான்கள், எக்ஸூக்யூட் செய்தது எப்படி?
சொகுசு கார்
  • Share this:
சென்னை வேளச்சேரியில் உள்ள பஞ்சாப் நேஷ்னல் வங்கியின் மேலாளர் தில்லை கோவிந்தன் என்பவர் மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில் இடைதரகர் மூலம் ஒரு கும்பல் தன்னை அனுகி காரை வாடகைக்கு விடும் தொழில் செய்து வருவதாகவும், இதனால் பல மடங்கு லாபம் ஈட்டுவதாக கூறி வருமான வரி ஆவணங்களை காண்பித்தனர்.

தொழிலை பெருக்கம் செய்வதற்காக மேலும் சில கார்கள் வாங்க லோன் தேவைப்படுவதாக கூறி தெரிவித்ததோடு மேலும் அலுவலக பங்களாவையும் காட்டியதாகவும் இதனை நம்பிய வங்கி மேலாளர் அந்த கும்பலுக்கு கார்லோன் வழங்கியதாகவும் பின்னர் தான் போலி ஆவணங்கள் மூலம் ஏமற்றப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார்.

மேலும், அந்த கும்பல் வங்கி கடனை திருப்பி செலுத்தாமல் செல்போன் எண்களை மாற்றி தலைமறைவாகி  இருந்து வந்ததாகவும் புகாரில் குறிப்பிட்டு இருந்தார்.


புகாரின் அடிப்படையில் வழக்குபதிவு செய்து விசாரணையை தொடங்கிய மத்திய குற்றப்பிரிவு போலீசார் அந்த கும்பலை தேடி வந்தனர். குறிப்பாக செல்போன் எண் மற்றும் விவரங்களை அடிக்கடி அந்த கும்பல் மாற்றி வந்ததால் போலீசார் கைது செய்யமுடியாமல் திணறி வந்தனர்.

கடந்த இரண்டாண்டுகளாக தேடப்பட்டு வந்த கும்பல் நீலாங்கரை முட்டுக்காடு பகுதியிலுள்ள ஒரு ரிசார்ட்டடில் தங்கி இருப்பதாக வந்த தகவலையடுத்து மத்திய குற்றபிரிவு ஏ.டி.சி சரவண குமார் தலைமையிலான போலீசார் அங்கு சென்று மூவரையும் கைது செய்தனர். இவர்களிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் கோடம்பாக்கம் ட்ரஸ்ட்புரத்தை சேர்ந்த பால விஜய்(35), நீலாங்கரை பகுதியை சேர்ந்த முகமது முசாமில்(34), மற்றும் அய்யாதுரை(32), என்பது தெரிய வந்தது.

போலீசாரின் கிடுக்குபிடி விசாரனையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. பாலவிஜயின் தந்தை பாலசுப்பிரமணி என்பவர் டெபுட்டி செகரட்டரியாக இருந்து ஓய்வு பெற்றவர் என்பதும் மேலும் தனது மகன் பாலவிஜய் பல வங்கிகளில் மோசடி செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் மனவேதனையில் அவர் ஆறு மாதத்திற்கு முன்பாக தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.மேலும் பாலவிஜய் சிறுவயதில் இருந்தே கார் மற்றும் பைக் ரேஸில் அதிக ஈடுபாடு கொண்டவர். இந்திய அளவிலான பைக் மற்றும் கார் ரேஸ் கிளப்புகளில் இவர் உறுப்பினராக இருந்து பல போட்டிகளில் பரிசு பெற்று உள்ளார்.  குறிப்பாக இவர் ரேஸ் பைக் மற்றும் ரேஸ் கார் போன்றவற்றிற்கு டியூனராக இருந்து வந்ததால் தனியாக ரேஸ் பைக், ரேஸ் கார் கிளப் வைத்திருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

இந்த நிலையில் திருநெல்வேலியை பூர்வீகமாகக் கொண்டு அங்கு துணிக்கடை வைத்து அங்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டதால் சென்னையில் மோசடி செய்து பிழைத்துக்கொள்ளலாம் என சென்னை வந்துள்ளார். இங்கு முகமது முசாமிலுக்கு ரேஸ் பைக்கில் மீது கொண்ட ஈடுபாட்டால் பால விஜயுடன் நட்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல ரேஸ் காரின் மீது மோகம் கொண்ட அய்யாதுரை என்பவரும் பாலவிஜயுடன் நட்பு ஏற்படுத்தி கொண்டுள்ளார்.

நாளடைவில் இந்த மூவரும் நெருங்கிய நண்பர்கள் ஆகினர். தங்கள் சொகுசு வாழ்க்கைக்கு அதிக பணம் தேவை என்பதால் மூவரும் வங்கி மோசடி திட்டத்தை கையில் எடுத்துள்ளனர்.
தாங்கள் மூவரும் இணைந்து சொகுசு கார் டிராவல்ஸ் நடத்துவதுபோல போலி இன்கம்டாக்ஸ் அறிக்கை தயாரித்து அதில் வருடத்திற்கு ரூபாய் 50 லட்சம் இன்கம்டாக்ஸ் கட்டுவது போலவும் மாதாமாதம் தங்களுக்கு பல கோடி ரூபாய் வருமானம் வருவதாகவும் போலியாக வங்கி ஸ்டேட்மென்ட், இன்கம்டாக்ஸ் ஸ்டேட்மெண்ட் ஆகியவற்றை போலியாக தயாரித்துள்ளனர்.

இப்படி போலியாக தயாரிக்கப்பட்ட டாக்குமெண்ட்கள் அனைத்தும் வங்கியில் உள்ள சில அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து அவர்களை தங்கள் மோசடி திட்டத்துக்கு பயன்படுத்தி வங்கி கடன் பெற்றதும் விசாரணையில் தெரியவந்தது. குறிப்பாக நுங்கம்பாக்கத்தில் உள்ள பேங்க் ஆப் இந்தியா, எழும்பூரில் உள்ள விஜயா பேங்க், திருவான்மியூர் மற்றும் வேளச்சேரியில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி, அடையாறில் உள்ள யூகோ வங்கி, ஆழ்வார்பேட்டையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி என 6 வங்கிகளில் அங்கு பணி புரியும் அதிகாரிகளுக்கு பல லட்ச ரூபாய் பணம் கொடுத்து அவர்களை தங்களுக்கு ஆதரவாக செயல்படுமாறு பயன்படுத்தி இந்த மோசடியில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது

இந்த விசாரணையில் இவர்கள் 3 வகைகளில் வங்கிகளை ஏமாற்றி இருப்பது தெரியவந்தது. முதல் வகையாக போலி ஆவணங்களை கொடுத்து மும்பை, திருவனந்தபுரம், பெங்களூர் போன்ற இடங்களில் உள்ள கார் ஷோரூம்களில் அங்குள்ள கார் டீலர்களுக்கு லட்ச கணக்கில் பணம் கொடுத்து அவர்கள் மூலமாக, புது மாடல் கார் வந்திருப்பதாகவும் அதனை வாங்குவதற்கு அந்தக் காரின் ஒரிஜினல் விலையை கூறி அதன் பணத்தை மொத்தமாக வங்கியிலிருந்து பெற்றுக்கொண்டு குறிப்பிட்ட காரை வாங்காமல் அந்த தொகையில் பாதி மதிப்புள்ள காரை வாங்கி மீதமுள்ள பணத்தை தாங்கள் எடுத்துக்கொண்டு காரையும் ஓடிச்சென்று பின்பு சில மாதங்கள் கழித்து காரையும் விற்று பணமாக்கியுள்ளனர்.

இரண்டாவது மோசடி வகையாக காரை அதன் ஒரிஜினல் விலைக்கு வாங்கி சில மாதங்கள் வட்டி கட்டி விட்டு பின்பு சிம் கார்டுகளை மற்றும் வீட்டு முகவரியை மாற்றி தலைமறைவாகி மோசடி செய்து வந்துள்ளனர். மூன்றாவது வகையாக கார் டீலர்கள் உதவியுடன் வெளிநாடுகளிலிருந்து உயர் ரக காரை இம்போர்ட் இருப்பதாகக் கூறி பணத்தை வங்கியில் இருந்து பெற்று பின்பு தலைமறைவாகி வந்துள்ளனர்.

இப்படி ஒரு வங்கியிலிருந்து பணம் பெற்று மோசடி செய்து அடுத்த வங்கிகள் என தொடர்ச்சியாக இவர்கள் மோசடி செய்தது அம்பலமாகியுள்ளது. மேலும், மேற்கூறிய மூன்று வகை மோசடிகளும் இவர்களால் தனியாக செய்ய முடியாது என்பதால் இவர்கள் மோசடி செய்த ஆறு வங்கிகளிலும் ஆறு வங்கி அதிகாரிகளுக்கு ரூபாய் 60 லட்சம் வரையும், பெங்களூர், திருவனந்தபுரம் மற்றும் மும்பை பகுதிகளில் உள்ள கார் டீலர்கள் மூன்று பேருக்கு 50 லட்சம் வரை லஞ்சமாக பணம் கொடுத்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது

இந்த மோசடி கும்பல் சுமார் 3 கோடியே 80லட்சம் ரூபாய் மதிப்பிலான ஆடி, ஜீப் ரேங்கலர், பி.எம்.டபிள்யூ., ஃபோர்டு முஸ்டங்க், பென்ஸ் போன்ற கார்களை வாங்கியும் அதனை திரும்பவும் மார்க்கெட்டில் விற்று பல கோடி ரூபாய் லாபம் பார்த்து அதன் மூலம் பெங்களூர், மும்பை, கோவா, டெல்லி போன்ற பகுதிகளுக்குச் சென்று அங்கு சூதாட்டம் மற்றும் பெண்கள் என சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்ததும் தெரிய வந்ததது.

இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்த வங்கி அதிகாரிகள் மற்றும் பெங்களூர், மும்பை, திருவனந்தபுரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த கார் டீலர் களையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

அண்மை செய்திகளுக்கு உடனுக்கு உடன் இணைதிருந்துகள்.
First published: November 29, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading