ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

சந்திர கிரகணம் 2022 : தமிழகத்தில் பார்க்க முடியுமா? நேரம், காலஅளவு - முழு விவரம்

சந்திர கிரகணம் 2022 : தமிழகத்தில் பார்க்க முடியுமா? நேரம், காலஅளவு - முழு விவரம்

சந்திர கிரகணம்

சந்திர கிரகணம்

Lunar Eclpse 2022 | செவ்வாய்க்கிழமை (08 நவம்பர் 2022) - முழு சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இந்தியாவில் அனைத்து இடங்களிலும் முழு சந்திர கிரகணத்தைப் பார்க்க இயலாது .

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  சந்திர கிரகணம் முழு நிலவு நாளில் சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வரும். சூரியன், பூமி மற்றும் சந்திரன் மூன்றும் ஒரே நேர்கோட்டில் இருக்கும் போது சந்திர கிரகணம் ஏற்படும். முழு நிலவு பூமியின் நிழலின் கீழ் வரும்போது முழு சந்திர கிரகணமும், சந்திரனின் ஒரு பகுதி பூமியின் நிழலின் கீழ் வரும் போது பகுதி சந்திர கிரகணமும் ஏற்படும்.

  செவ்வாய்க்கிழமை (08 நவம்பர் 2022) - முழு சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இந்தியாவில் அனைத்து இடங்களிலும் முழு சந்திர கிரகணத்தைப் பார்க்க இயலாது . ஏனெனில் சந்திர உதயத்திற்கு முன்பாகவே மொத்த நிகழ்வுகளும் நடந்து கொண்டிருக்கும். முழு மற்றும் பல்வேறு பகுதி வடிவ நிலைகளின் முடிவினை நாட்டின் கிழக்குப் பகுதிகளில் காண முடியும்.

  இந்தியாவின் கிழக்குப் பகுதிக்குச் செல்லச் செல்ல சந்திர கிரகணத்தைப் பார்க்க இயலும். இந்தப் பகுதிகளில், சந்திர கிரகணம் பொதுவாக எல்லா இடத்திலும் ஒரே நேரத்தில் ஏற்படும். மேற்கு வானில் சூரியன் அந்தி சாயும் போது, கிழக்கு வானில் நிலவு வெளிப்படும் நேரத்தில் குறைவான காலகட்டத்தில் பகுதி சந்திர கிரகணத்தைப் பார்க்க முடியும்.

  Also Read : சந்திர கிரகணம் 2022 : கர்ப்பிணி பெண்கள் எச்சரிக்கை.. இந்த 5 விஷயங்களை மறக்க வேண்டாம்

  இந்தியாவின் பெரும்பகுதியில் கிரகணம் தெரியாது என்றாலும், கொல்கத்தா போன்ற கிழக்கு பகுதிகளில் மட்டுமே இதன் இறுதி நிலைக்களைக் காணலாம். கொல்கத்தாவில் சந்திரன், கிழக்கு அடிவானத்தில் இருந்து மாலை 4.52 மணிக்கு உதயமாகும் என்று கணக்கிடப்படுகிறது. மேகமூட்டம் இல்லாமல் இருந்து வானத்தின் வெளிச்சம் குறைந்தால் 5.11 மணி வரை நிகழும் முழு சந்திர கிரகணத்தை பார்க்க வாய்ப்புள்ளது. சந்திர கிரகணம் முடியும் பிற்பகுதியை இந்தியாவின் கிழக்கு பகுதி மக்கள் காணமுடியும் .

  தமிழகத்தில் சந்திர கிரகணம் நேரம் எப்போது?

  தமிழ் நாட்டில் சென்னையில், சந்திர கிரகணம் இந்திய நேரப்படி 5 மணி 39 நிமிடங்கள் தொடங்கி அடுத்த நாள் காலை 8.59 மணியளவில் முடிவடையும் என கணக்கிடப்பட்டுள்ளது.

  கிரகணம் ஏற்படும் போது நிலவு ஏன் சிவப்பாக மாறுகிறது ?

  வெள்ளை ஒளிக்குள் ஏழு நிறங்கள் இருப்பது நீங்கள் அறிந்ததே. அதில் நீல ஒளியானது பூமியின் வளிமண்டலத்தில் ஒளிச் சிதறல் அடைகிறது, இதன் காரணமாக வானம் நீல நிறமாக இருக்கிறது. அதேபோல ஒளியானது வளிமண்டலத்தின் வழியே செல்லும் போது சிவப்பு நிறமானது ஒளி விலகள் அடைகிறது. அது நிலவின் மீது படுகிறது, இதன் காரணமாக நிலவு சிவப்பு நிறமாகக் காணப்படுகிறது.

  அடுத்த சந்திரகிரகணம் எப்போது?

  அடுத்த முழு சந்திர கிரகணம் மார்ச் 14, 2025 அன்று நிகழும் என்றும், ஒரு பகுதி சந்திர கிரகணம் அடுத்த அக்டோபர் 2023-ல் நிகழும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Published by:Vijay R
  First published:

  Tags: Lunar eclipse