முகப்பு /செய்தி /தமிழ்நாடு / பிரபாகரன் உயிருடன் இருக்கும் ஆதாரம் கிடைத்தவுடன் வெளியிடுவேன்... பழ.நெடுமாறன் விளக்கம்..!

பிரபாகரன் உயிருடன் இருக்கும் ஆதாரம் கிடைத்தவுடன் வெளியிடுவேன்... பழ.நெடுமாறன் விளக்கம்..!

பழ.நெடுமாறன்

பழ.நெடுமாறன்

பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்ற தகவல் இலங்கை தமிழர்களுக்கு புதிய நம்பிக்கையையும் உற்சாகத்தையும் கொடுத்துள்ளது என பழ.நெடுமாறன் கருத்து.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Madurai, India

பிரபாகரன் உயிரோடு இருப்பதாக தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் அண்மையில் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். பல அரசியல் தலைவர்களும் இவரின் இந்த பேட்டிக்கு பின்னர் தங்களது கருத்துக்களை தெரிவித்திருந்தனர். இதுதொடர்பான விவாதங்களும் அரங்கேறியது.

இந்நிலையில் மதுரையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்த பழ.நெடுமாறன், விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்ற தகவல் இலங்கை தமிழர்களுக்கு புதிய நம்பிக்கையையும் உற்சாகத்தையும் கொடுத்துள்ளது. அவர் உயிருடன் இருக்கிறார் என்ற ஆதாரத்தை நாங்கள் வெளியிட விரும்பினால் உங்களை அழைத்தே நாங்கள் கூறுவோம் என தெரிவித்தார்.

மேலும் எனக்கு அதுகுறித்த ஆதாரம் கிடைத்தால் நிச்சயம் பத்திரிக்கையாளர்களை சந்தித்து அதை வெளியிடுவேன் என பழ. நெடுமாறன் தெரிவித்துள்ளார். விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என கடந்த மாதம் 13ஆம் தேதி பழ.நெடுமாறன் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: LTTE, Pazha Nedumaran, Srilankan Tamil