ரூ.13.5 லட்ச மதிப்புள்ள மருந்துப் பொருள்களை திரும்பக் கொடுத்த முன்னாள் ராணுவத்தினர் - பாராட்டிய லெப்டினன்ட் ஜென்ரல்

ரூ.13.5 லட்ச மதிப்புள்ள மருந்துப் பொருள்களை திரும்பக் கொடுத்த முன்னாள் ராணுவத்தினர் - பாராட்டிய லெப்டினன்ட் ஜென்ரல்

லெப்டினன்ட் ஜென்ரல் அருண்

வேலூர் ராணுவ கேண்டினில் 13.5 லட்ச ரூபாய் மதிப்புள்ள கேன்சர் மருந்துப் பொருள்களை திரும்ப அளித்த முன்னாள் ராணுவ வீரர் குடும்பத்தினரை லெப்டினன்ட் ஜென்ரல் அருண் பாராட்டியுள்ளார்.

 • Share this:
  வேலூரிலுள்ள முன்னாள் ராணுவ ஊழியர்களின் குடும்பத்துக்கான மளிகைப் பொருள்கள் மற்றும் மருத்துவக் கூடத்துக்கு லெப்டினன்ட் ஜென்ரல் அருண் சென்று நேற்று பார்வையிட்டார். அங்கு சென்ற அவர் முன்னாள் ஊழியர்கள் மற்றும் ராணுவத்தில் பணியாற்றி கணவனை இழந்தப் பெண்களுடன் கலந்துரையாடினார். முன்னாள் ராணுவ ஊழியர்கள் மற்றும் ராணுவத்தில் பணியாற்றி கணவனை இழந்தப் பெண்களுக்கு அவர்களுக்கு தேவையானப் பொருள்கள் சரிவர கிடைக்கும் வகையில் செயல்படும் வேலூர் ராணுவ மிலிட்டரி கேண்டின் நிர்வாகத்தைப் பாராட்டினார்.

  மேலும், மறைந்த ஹவில்தார் நேருவின் மனைவி ஜெயந்தி மற்றும் முன்னாள் ஹவில்தார் ஸ்ரீனிவாசன் ஆகியோர் அவர்களது வாழ்க்கைத் துணைகளை புற்றுநோயின் காரணமாக இழந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் 13.5 லட்ச ரூபாய் மதிப்புள்ள புற்றுநோய்க்கான மருந்துகளை கேண்டின் நிர்வாகத்திடம் திரும்ப அளித்துள்ளனர். அதனையும், லெப்டினன்ட் ஜென்ரல் அருண் பாராட்டினார்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: