டேங்கர் லாரிகள் இன்று முதல் வேலைநிறுத்தம்... கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்...!

LPG Tanker Lorries

கேஸ் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் காரணமாக, கோடி கணக்கில் வருவாய் இழப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
திட்டமிட்டப்படி இன்று காலை முதல் கேஸ் டேங்கர் லாரிகளின் ஸ்டிரைக் தொடங்கியது. ஸ்டிரைக் காரணமாக கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களை உள்ளடக்கிய தென்மண்டல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.

அதன் சங்க தலைவர் பொன்னம்பலம், செயலாளர் கார்த்திக் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது அவர்கள், 2018-ம் ஆண்டு செப்டம்பரில் எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்த புதிய ஒப்பந்த படி 700 லாரிகள் வேலைவாய்ப்பை இழந்துள்ளன.

இது தொடர்பாக பல முறை கடிதம் எழுதியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் வேறு வழி இல்லாமல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என்று கூறினர்.

மேலும், வேலைநிறுத்தம் காரணமாக அடுத்த 15 நாட்களுக்கு கேஸ் தட்டுப்பாடு ஏற்படாது என்றும் அவர்கள் தெரிவித்தனர். இதனிடையே, கேஸ் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் காரணமாக, நாள் ஒன்றுக்கு 2.5 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Also see... ஹெலிகாப்டர் தரையிறங்குவதில் சிக்கல்: மரண பீதியடைந்த பாஜக எம்எல்ஏ
அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.Published by:Vaijayanthi S
First published: