கேஸ் சிலிண்டர் டெலிவரிக்கு ‘டிப்ஸ்’ - உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

கேஸ் சிலிண்டர்

 • News18
 • Last Updated :
 • Share this:
  கேஸ் சிலிண்டர்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஏஜென்சிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்க எண்ணை நிறுவனங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  இது தொடர்பாக சென்னை அண்ணனூரைச் சேர்ந்த மருத்துவர் லோகரங்கன் தாக்கல் செய்த மனுவில், வீட்டு உபயோகத்துக்கான கேஸ் சிலிண்டர் மொத்த கட்டணத்தில், அதை வினியோகிப்பதற்கான கட்டணமும் சேர்த்து ரசீதில் குறிப்பிடப்படும் நிலையில், சிலிண்டர்களை வீடுகளுக்கு டெலிவரி செய்பவர்கள், அடுக்குமாடி குடியிருப்புகளில் தளங்களுக்கு ஏற்ப, 20 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

  நாடு முழுவதும் 23 கோடி வீடுகளுக்கு சமையல் எரிவாயு இணைப்புகள் உள்ள நிலையில் இது போன்று கூடுதல் கட்டணம் வசூலித்து மோசடிகள் நடைபெறுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

  இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சத்தியநாராயணன் சேஷசாயி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

  அப்போது, கூடுதல் கட்டணம் வசூலித்ததாக இதுவரை 2124 புகார்கள் வந்துள்ளதாகவும், புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் எண்ணை நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

  இதையடுத்து, நடவடிக்கைகளுக்கு உள்ளான ஏஜென்ஸிக்களின் விவரங்களை இணையதளத்தில் ஏன் வெளியிடக் கூடாது என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் 'டாடா ஏஸ்' போன்ற வாகனங்களில் சிலிண்டர்கள் ஏற்றி செல்லப்படுவதற்கு கண்டனம் தெரிவித்தனர்.

  மேலும், முறைகேடு புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து வருகிற 1-ஆம் தேதிக்குள் எண்ணை நிறுவனங்கள் பதில் அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளனர்.

  Published by:Sankar
  First published: