• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • "தேர்தல் கருத்துக் கணிப்புக்கும் எங்களுக்கும் தொடர்பு இல்லை” - லயோலா கல்லூரி அறிக்கை

"தேர்தல் கருத்துக் கணிப்புக்கும் எங்களுக்கும் தொடர்பு இல்லை” - லயோலா கல்லூரி அறிக்கை

லயோலா கல்லூரி

லயோலா கல்லூரி

மக்கள் பண்பாட்டு மையம் மற்றும் லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பின் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. 

  • News18
  • Last Updated :
  • Share this:
பண்பாடு மக்கள் தொடர்பகம் வெளியிட்டுள்ள தேர்தல் ஆய்வறிக்கை தொடர்பாக லயோலோ கல்லூரி அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் மக்கள் பண்பாட்டு மையம் மற்றும் லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பின் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன.

அதில் தமிழகம், புதுவையில் திமுக கூட்டணி 27 முதல் 33 மக்களவைத் தொகுதிகளில் வெற்றிபெறும் என கணிக்கப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணி 3 முதல் 5 மக்களவைத் தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும் எனவும் கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் அமமுக தலைமையிலான கூட்டணி ஒன்றிரண்டு தொகுதிகளில் வெற்றிபெற வாய்ப்பிருப்பதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.

இதே போன்று 18 சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தல் தொடர்பான கணிப்புகளிலும் திமுகவுக்கு அதிகமான இடங்கள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக 9 முதல் 11 சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றிபெற வாய்ப்பு இருப்பதாக கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

ஆளும் அதிமுக 2 முதல் 3 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.டி.டி.வி.தினகரன் தலைமையிலான அமமுக 3 முதல் 4 தொகுதிகளில் வெற்றிபெற வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.இடைத்தேர்தலில் 2 தொகுதி முடிவுகளை கணிக்க முடியாத நிலை உள்ளதாகவும் கருத்துக்கணிப்பு தெரிவித்து இருந்தனர்.

இந்த கருத்துக்கணிப்பால் அரசியல் வட்டாரங்களில் சலசலப்பு ஏற்பட்டது. இந்நிலையில், இந்த கருத்து கணிப்பு தொடர்பாக லயோலா கல்லூரி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.



அதில் 2019 நாடாளுமன்ற தேர்தல் 40தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு யாருக்கு என்ற தலைப்பில், பண்பாடு மக்கள் தொடர்பகம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கைக்கும், லயோலா கல்லூரிக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது என்று தெரிவித்துள்ளது.

Also Watch






தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.





ஐ.பி.எல் தகவல்கள்:

POINTS TABLE:


SCHEDULE TIME TABLE:


ORANGE CAP:


PURPLE CAP:


RESULTS TABLE:

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vijay R
First published: