Home /News /tamil-nadu /

தமிழகத்தில் வெற்றி வாய்ப்பு யாருக்கு: லயோலா முன்னாள் மாணவர்கள் கருத்துக்கணிப்பு!

தமிழகத்தில் வெற்றி வாய்ப்பு யாருக்கு: லயோலா முன்னாள் மாணவர்கள் கருத்துக்கணிப்பு!

மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி

மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி

அடுத்தமுறை யார் பிரதமராக வரவேண்டும் என்ற கேள்விக்கு, ராகுல் காந்திக்கு ஆதரவாக 35.7 % பேரும் மோடிக்கு ஆதரவாக 27 % பேரும் ஆதரவாகவும் தெரிவித்துள்ளனர்.

  • News18
  • Last Updated :
    லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் நடத்திய கருத்துக்கணிப்பில் தி.மு.க கூட்டணி 27- 33 தொகுதிகளில் வெற்றிபெறும் வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் மற்றும் பண்பாட்டு மக்கள் தொடர்பகம் இணைந்து மக்களவைத் தேர்தல் முடிவுகள் குறித்து நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளனர். அதன்படி, தமிழகம் மற்றும் புதுச்சேரியிலுள்ள மொத்தமுள்ள 40 மக்களவைத் தொகுதிகளில் தி.மு.க கூட்டணி 27 முதல் 33 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்புள்ளது.

    அ.தி.மு.க கூட்டணி 3-5 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. அ.ம.மு.க 2 தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. 18 சட்டமன்றத் தொகுதிகளில் தி.மு.க கூட்டணி 9 -11 தொகுதிகளில் வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளது. அ.தி.மு.க 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளது. அ.ம.மு.க 3 - 4 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பண்பாடு மக்கள் தொடர்பகம் சார்பில், மேற்கொள்ளப்பட்ட இந்த கருத்துக் கணிப்பில் 21 ஆயிரத்து 464 பேர் பங்கேற்றுள்ளனர். அந்த ஆய்வில் தமிழகத்தின் முதல்வராக மு.க.ஸ்டாலின் வர வேண்டும் என்று 33 % பேரும், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் வர வேண்டும் என்று 22 % பேரும், தினகரன் வர வேண்டும் என்று 20 % பேரும், கமல்ஹாசன் வரவேண்டும் என்று 7 % பேரும் தெரிவித்துள்ளனர்.

    அடுத்த முறை மோடிக்கு பிரதமராகும் வாய்ப்பு உள்ளதாக 27 % பேரும், வாய்ப்பு இல்லை 55 % பேரும் தெரிவித்துள்ளனர். அடுத்தமுறை யார் பிரதமராக வரவேண்டும் என்ற கேள்விக்கு, ராகுல் காந்திக்கு ஆதரவாக 35.7 % பேரும் மோடிக்கு ஆதரவாக 27 % பேரும் ஆதரவாகவும் தெரிவித்துள்ளனர். அ.தி.மு.க அரசு தாக்குப் பிடிக்க மத்திய அரசின் உதவிதான் காரணம் என்று 59 % பேர் தெரிவித்துள்ளனர்.

    தொகுதிவாரியாக கருத்து கணிப்பு முடிவுகள்:



    திருவள்ளூவர் - காங்கிரஸ்
    வட சென்னை - தி.மு.க
    மத்திய சென்னை - தி.மு.க
    தென் சென்னை - தி.மு.க
    ஸ்ரீபெரும்புதூர் -தி.மு.க
    காஞ்சிபுரம் - தி.மு.க
    அரக்கோணம் - தி.மு.க
    வேலூர் - இழுபறி
    கிருஷ்ணகிரி - இழுபறி
    தருமபுரி - இழுபறி
    திருவண்ணாமலை - தி.மு.க
    ஆரணி - காங்கிரஸ்
    விழுப்புரம் - இழுபறி
    சேலம் - தி.மு.க
    கள்ளக்குறிச்சி - தி.மு.க
    நாமக்கல் - கொங்குநாடு தேசிய மக்கள் கட்சி
    ஈரோடு - ம.தி.மு.க
    நீலகிரி - தி.மு.க
    பொள்ளாச்சி - தி.மு.க
    திருப்பூர் - இழுபறி
    கோயம்புத்தூர் - பா.ஜ.க
    திண்டுக்கல் - தி.மு.க
    கரூர் - காங்கிரஸ்
    திருச்சி - அ.ம.மு.க வெற்றி
    பெரம்பலூர் -இ.ஜ.க
    கடலூர் - தி.மு.க
    சிதம்பரம் - வி.சி
    மயிலாடுதுறை- அ.தி.மு.க
    நாகப்பட்டினம் - இழுபறி
    சிவகங்கை - காங்கிரஸ்
    தஞ்சாவூர் - தி.மு.க
    மதுரை - மார்க்ஸிஸ்ட்
    தேனி - அம்முக
    விருதுநகர் - காங்கிரஸ்
    ராமநாதபுரம் - இழுபறி
    தென்காசி - இழுபறி
    தூத்துக்குடி - தி.மு.க
    திருநெல்வேலி - அ.தி.மு.க
    கன்னியாகுமரி - காங்கிரஸ்
    புதுச்சேரி - காங்கிரஸ்

    ஐ.பி.எல். விவரங்கள்:





    Published by:Karthick S
    First published:

    Tags: Elections 2019, Lok Sabha Election 2019, Loyola College, Loyola Survey 2019, Tamil Nadu Lok Sabha Elections 2019

    அடுத்த செய்தி