• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • “சமூக அமைதியைக் கெடுக்கும் செயலை ஊக்குவிக்க மாட்டோம்” லயோலா கல்லூரி அறிக்கை

“சமூக அமைதியைக் கெடுக்கும் செயலை ஊக்குவிக்க மாட்டோம்” லயோலா கல்லூரி அறிக்கை

லயோலா கல்லூரி

லயோலா கல்லூரி

#LoyolaCollege ஓவியக் கண்காட்சி குறிப்பிட ஒரு மதத்தினரை காயப்படுத்துவது போல இருப்பதாக பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை செளந்திரராஜன், ஹெச்.ராஜா உள்ளிட்ட சிலர் கடுமையாக விமர்சித்திருந்தனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
லயோலா கல்லூரியில் நடைபெற்ற ஓவியக் கண்காட்சியில் இடம்பெற்ற ஓவியங்கள் குறித்து கடுமையான சர்ச்சைகள் எழுந்த நிலையில், கல்லூரி நிர்வாகம் சார்பில் மன்னிப்புக் கோரப்பட்டுள்ளது.

லயோலா கல்லூரியில் நடந்த ஓவியக் கண்காட்சி குறிப்பிட ஒரு மதத்தினரை காயப்படுத்துவது போல இருப்பதாக பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை செளந்திரராஜன், ஹெச்.ராஜா உள்ளிட்ட சிலர் கடுமையாக விமர்சித்திருந்தனர்.

இதையடுத்து லயோலா கல்லூரியின் கலை மற்றும் இலக்கிய மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள மன்னிப்புக் கடிதத்தில், ’நாட்டின் பன்முகத் தன்மை மற்றும் பண்பாடுகளை சம அளவில் மதித்து நடக்கும் கல்லூரி, லயோலா கல்லூரி. சமூகத்தின் அமைதியைக் கெடுக்கும் எந்தவொரு செயலையும் கல்லூரி நிர்வாகம் ஊக்குவிக்காது.



கடந்த 19 மற்றும் 20-ம் தேதிகளில் கல்லூரியில் நடைபெற்ற ‘வீதி விருது விழா’ நிகழ்வு தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதற்குக் கடுமையாக வருத்தம் தெரிவிக்கிறோம்.

எங்கள் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்ட ஓவியங்களை உடனடியாக நீக்கி உள்ளோம். வேதனைப்படுத்திய இவ்விவகாரத்துக்காக மன்னிப்புக் கோருகிறோம்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சர்ச்சைக்குள்ளான சென்னை லயோலா கல்லூரியின் ஓவியக் கண்காட்சி!

மேலும் பார்க்க: கோட்டையில் யாகம் நடத்தியது உண்மையா? ஓபிஎஸ் பதில்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Rahini M
First published: