குறைந்த விலையில் ஆக்சிஜன் உபகரணம் தயாரிக்கும் திருச்சி நிறுவனம்

ஆக்சிஜன்

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் சுவாசப் பிரச்சினையைத் தீர்க்க திருச்சியைச் சேர்ந்த தனியார் நிறுவனம் குறைந்த விலையில்ஆக்சிஜன்வழங்கும் உபகரணங்களை தயாரித்து வழங்கி வருகிறது.

 • Share this:
  கரோனா தொற்று 2-வது அலை வேகமாக பரவி வரும் நிலையில் சுவாசக் கோளாறால் பாதிக்கப்படும் கரோனா தொற்றாளர்களுக்கு ஆக்சிஜன் முக்கிய தேவையாக உள்ளது. நாடு முழுவதும் ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கான தேவை பெரிய அளவில் அதிகரித்துள்ளது.

  இதனையடுத்து கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் சுவாசப் பிரச்சினையைத் தீர்க்க திருச்சியைச் சேர்ந்த தனியார் நிறுவனம் குறைந்த விலையில்ஆக்சிஜன்வழங்கும் உபகரணங்களை தயாரித்து வழங்கி வருகிறது.

  திருச்சியில் உள்ள `கிராஸ் ஃபியூஷன்’ என்ற தொழில்நுட்ப தொடக்க நிலை நிறுவனம் கொரோனா தொற்றாளர்களுக்கு குறைந்த அளவிலான ஆக்சிஜன் வழங்கும் உபகரணங்களை தயாரித்து வருகிறது.

  இந்நிறுவனம் தயாரித்துள்ள NIV-R20 என்ற உபகரணத்தை, மற்ற உபகரணங்களுடன் ஒப்பிடும்போது மிகக்குறைந்த ஆக்சிஜன், அதாவது நிமிடத்துக்கு 2 லிட்டர் மட்டும் இதில் உபயோகப்படுத்தப்படுகிறது. இந்த குறைந்த அளவு ஆக்சிஜனைக் கொண்டே கொரோனா தொற்றாளர்களின் ஆக்சிஜன் அளவை 80 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக விரைவில் உயர்த்த முடியும் என்கிறது அந்த நிறுவனம்.

  கடந்த 9 மாதங்களில் பல்வேறு மருத்துவமனைகளுக்கு இந்த உபகரணங்கள் வழங்கப்பட்டு சிறப்பாகச் செயல்படுவதாகவும் கூறப்படுகிறது.

  ஐசியு-வில் பயன்படுத்தப்படும் வெண்டிலேட்டர்களை விட இந்த ஆக்சிஜன் உபகரணம் விலை மிகவும் குறைவு என்கிறது கிராஸ் பியூஷன் நிறுவனம்.

  இதன் சிறப்பம்சம் என்னவெனில் நோயாளிகள் வெளிவிடும் மூச்சுக்காற்றை மறுசுழற்சி செய்யும் வசதியும் இந்த உபகரணத்தில் உண்டு என்கிறது அந்த நிறுவனம்.

  இந்த உபகரணத்தை பயன்படுத்தினால், ஐசியூ-க்கு செல்லும் கரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை வெகுவாக குறையும், சுவாசப் பிரச்சினையால் வென்டிலேட்டர் கிடைக்காமல் ஏற்படும் உயிரிழப்பும் தடுக்கப்படும். மருத்துவமனைகளுக்கு உபகரணம் வாங்கும் செலவு மற்றும் ஆக்சிஜன் வாங்கும் செலவு ஆகியவை குறையும் என்று கூறுகிறது இந்த நிறுவனம்.
  Published by:Muthukumar
  First published: