Home /News /tamil-nadu /

அடுத்த 48 மணி நேரத்திற்குள், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு

அடுத்த 48 மணி நேரத்திற்குள், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு

Chennai met

Chennai met

ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    தமிழகத்தில் வெப்ப சலனம் மற்றும் மேலடுக்கு சுழற்சியின் காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்குள் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    கோவை, நீலகிரி, தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி, ஈரோடு, நாமக்கல், திண்டுக்கல் ஆகிய 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு.

    மேலும் மதுரை, திருச்சி, கரூர், சேலம், வேலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் வெப்பநிலை 40 முதல் 42 டிகிரி செல்சியஸ் வரை இன்று பதிவாகும். எனவே விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் யாரும் முற்பகல் 11 மணியிலிருந்து பிற்பகல் 3 மணி வரை தேவை இல்லாமல் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    மீனவர்களுக்கான எச்சரிக்கை

    வட மேற்கு வங்க கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்பதால் அடுத்த இரண்டு நாட்களுக்கு மீனவர்கள் அந்தப் பகுதிக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    மேலும் தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதால் வரும் மே 31ம் தேதி முதல் ஜூன் 4ஆம் தேதி வரை அரபிக் கடலுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் கொடநாடு, கிருஷ்ணகிரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறையில் 2 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. அதேபோல தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் ஒரு சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

    சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலையாக 36 டிகிரி செல்சியசும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 29 டிகிரி செல்சியசும் பதிவாக கூடும்.






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


    Published by:Gunavathy
    First published:

    Tags: MET, Weather Forecast

    அடுத்த செய்தி