• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • இந்த ஆண்டு மழை தீபாவளிதான் - வானிலை மையம் கணிப்பு

இந்த ஆண்டு மழை தீபாவளிதான் - வானிலை மையம் கணிப்பு

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

வரும் 6, 7 மற்றும் 8-ம் தேதிகளில் தென் தமிழகத்தில் கனமழை முதல் அதி கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    தென் மேற்கு வங்கக் கடல் மற்றும் குமரிக்கடல் பகுதியில் வரும் 6-ம் தேதி (தீபாவளி கொண்டாடப்படும் நாள்) குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக அன்று தமிழகத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் இன்று தமது அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது: தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் 6-ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகும். அன்றைய தினம் கடல் சீற்றத்துடன் காணப்படும்.

    அப்போது மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால் 6 மற்றும் 7-ம் தேதிகளில் தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளிலும், 7 மற்றும் 8-ம் தேதிகளில் குமரிக் கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளிலும் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். மேலும், தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்யும் என்றும் பாலச்சந்திரன் கூறினார்.

    கனமழை: இதை இந்திய வானிலை ஆய்வு மையமும் உறுதி செய்துள்ளது. இதுதொடர்பாக, அந்த மையம் விடுத்துள்ள அறிவிப்பில், ’வரும் 6-ம் தேதி மத்திய தெற்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகும். இதன் காரணமாக வரும் 6, 7 மற்றும் 8-ம் தேதிகளில் தென் தமிழகத்தில் கனமழை முதல் அதி கனமழை பெய்யக்கூடும்’ என்று தெரிவித்துள்ளது.

    Also watch

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:DS Gopinath
    First published: