ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

மக்களே உஷார்.. மீண்டும் தொடங்கப்போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..

மக்களே உஷார்.. மீண்டும் தொடங்கப்போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..

மழை

மழை

நாளை (நவ. 18) இந்த காற்றழுத்த தாழ்வு  பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    தமிழ்நாட்டில் நவம்பர் 20, 21 ஆகிய தேதிகளில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இன்று அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகியுள்ளது. இது தொடர்ந்து தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் இருந்து வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு வங்க கடல் பகுதிக்கு வரும் என கணிக்கப்பட்டுள்ளது.

    அதுமட்டுமின்றி நாளை (நவ. 18) இந்த காற்றழுத்த தாழ்வு  பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

    தமிழ் குடும்பங்களை மீண்டும் அகதிகளாக்குவதா? நீலகிரியில் போராட்டம் அறிவித்த அண்ணாமலை! (news18.com)

    இதன் காரணமாக வரும் 20 மற்றும் 21 தேதிகளில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதிகளில் பரவலாக கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

    மீனவர்களுக்கு எச்சரிக்கை:

    நாளை முதல் மறு உத்தரவு வரும் வரை மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது

    ஆழ்கடல் மீன்பிடி படகுகளில் உள்ள மீனவர்களை தொடர்பு கொண்டு அருகில் உள்ள மீன்பிடி துறைமுகங்களில் தங்கள் படகுகளை பாதுகாப்பாக நிறுத்திக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது

    வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ள நிலையில் அனைத்து மண்டல இயக்குனர்களுக்கும் மீன்வளத்துறை எச்சரிக்கைன் விடுத்துள்ளது. நாளை முதல் 45 கி.மீ முதல் 65 கி.மீ வரை காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க வேண்டாம் என மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது

    Published by:Siddharthan Ashokan
    First published:

    Tags: Chennai Rain, Rain Update, Weather News in Tamil