ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

மாறுது வானிலை.. நவம்பர் 19ல் வெளுக்கப்போகுது கனமழை.. புதிய எச்சரிக்கை!

மாறுது வானிலை.. நவம்பர் 19ல் வெளுக்கப்போகுது கனமழை.. புதிய எச்சரிக்கை!

கனமழை

கனமழை

19 ஆம் தேதி மீண்டும் தொடங்கும் மழை படிப்படியாக தீவிரமடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு உருவாகும் எனவும் இதனால் வரும் 19, 20 ஆகிய தேதிகளில் கனமழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

    வங்கக்கடலில் கடந்த வாரத்தில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவடைந்து அரபிக்கடல் நோக்கி சென்றது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. சீர்காழி உள்ளிட்ட பகுதிகளில் இன்னும் வெள்ளம் வடியாததால் மக்கள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

    இந்நிலையில், தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டியுள்ள அந்தமான் கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அடுத்த 3 நாட்களுக்கு தமிழ்நாடு வானிலை.. பாடல் வரி மூலம் பக்கா அலெர்ட் - வெதர்மேன் கொடுத்த கூல் அப்டேட்! (news18.com)

    இதனால் வரும் நவம்பர் 19, 20ஆம் தேதிகளில் தமிழ்நாடு கடலோர பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும் 19 ஆம் தேதி மீண்டும் தொடங்கும் மழை படிப்படியாக தீவிரமடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் இருந்து வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு வங்க கடல் பகுதியில் வரும் 18ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

    16.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    17.11.2022 மற்றும் 18.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    Published by:Siddharthan Ashokan
    First published:

    Tags: Chennai rains, Heavy Rainfall, MET warning, Rain Update, Weather News in Tamil