• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும் பகுதியில் மாற்றம்.. எங்கு கரையை கடக்கிறது?

காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும் பகுதியில் மாற்றம்.. எங்கு கரையை கடக்கிறது?

காற்றழுத்த தாழ்வு மண்டலம்

காற்றழுத்த தாழ்வு மண்டலம்

காற்றழுத்த தாழ்வு மண்டலம்கடலூரை ஒட்டி கரையைக் கடக்கும் என்று முதலில் தெரிவிக்கப்பட்டது. தற்போது சற்று வடக்கே நகர்ந்து மகாபலிபுரம் முதல் ஸ்ரீஹரிகோட்டா வரை கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • Share this:
    வங்க கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்தி தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறும் என்றும் கடலூர் அருகே கரையை கடக்கும் என்றும் கூறப்பட்டிருந்தது. தற்போது கரையை கடக்கும் பகுதியில் மாற்றத்திற்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    வங்க கடலின் மத்தியப் பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்னும் 6 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறவுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  காற்றழுத்த மண்டலம் தமிழக கடற்கரை பகுதியை நாளை காலை 11 மணி அளவில் நெருங்கும். அதனை தொடர்ந்து மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு ஆந்திரா, வட தமிழகம் - புதுச்சேரி கடற்கரையை காரைக்காலுக்கும் - ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடைப்பட்ட பகுதியில் கடலூருக்கு அருகில் நாளை மாலை கடக்கக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.

    இதன் காரணமாக, வட கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் தரைக்காற்று மணிக்கு 30 கிலோ மீட்டர் வேகத்தில் 11ஆம் தேதி காலை முதல் வீசக்கூடும். தமிழகத்தில் வட மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

    தற்போது, காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும் பகுதியில் மாற்றம் ஏற்படக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரைக்கால் மற்றும் ஸ்ரீஹரிகோட்டாவிற்கு இடையே கடலூரை ஒட்டி கரையைக் கடக்கும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது சற்று வடக்கே நகர்ந்து மகாபலிபுரம் முதல் ஸ்ரீஹரிகோட்டா வரை கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதையும் படிங்க: திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் ஆகிய 7 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: