காதலியின் உடலை எரிக்கும்போது உடன் விழுந்து உயிரைமாய்த்த ஒருதலைக் காதலர் - கள்ளக்குறிச்சியில் நடந்தது என்ன?

கள்ளக்குறிச்சியில் தற்கொலை செய்து கொண்ட காதலியின் உடலை தகனம் செய்தபோது, அதில் விழுந்து காதலரும் உயிரைவிட்டதாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

காதலியின் உடலை எரிக்கும்போது உடன் விழுந்து உயிரைமாய்த்த ஒருதலைக் காதலர் - கள்ளக்குறிச்சியில் நடந்தது என்ன?
கோப்புப் படம்
  • Share this:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையை அடுத்துள்ள மேட்டுநன்னாவரம் கிராமத்தை சேர்ந்த விவசாயி ஆறுமுகத்திற்கு மூன்று மகள்கள்.

மூத்த மகன் நித்யஸ்ரீ  திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி நர்சிங் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இரண்டாவது மகள் பன்னிரண்டாம் வகுப்பும், மூன்றாவது மகள் பத்தாம் வகுப்பும் படித்து வருகின்றனர்.

மூவரும் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஒரே செல்போனை மூன்று பேரும் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் இருந்ததால் அவர்களுக்கு ஏற்பட்ட தகராறில் நித்தியஸ்ரீ கடந்த 29 ஆம் தேதி வீட்டில் எலி பேஸ்டை சாப்பிட்டு தற்கொலை செய்த கொண்டதாக கூறப்பட்டது.


இந்த வழக்கை தொடர்ந்து விசாரித்த போலீசார், ஆறுமுகம் வீட்டில் 3 பேருக்கும் தனித்தனியாக ஸ்மார்ட் இருந்தது தெரிய வந்தது.

மூத்த மகள் நித்தியஸ்ரீ படிக்காமல் அடிக்கடி போனில் யாருடனோ பேசிக்கொண்டும், போனில் வாட்ஸ்ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இங்கிக்கொண்டும் இருப்பதை பார்த்த தந்தை திட்டியதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக திருநாவலூர் போலீசார் தொடர்ந்து விசாரித்து வரும் நிலையில் இந்த வழக்கில் கூடுதலாக நித்யஸ்ரீயை காதலித்த மாணவர் ஒருவரும் தற்கொலை செய்து கொண்டதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.உளுந்தூர் பேட்டையை அடுத்துள்ள ஆத்தூர் கிராமத்தை சேர்ந்த ராமு அங்குள்ள ஐடிஐ கல்லூரியில் படித்து வந்துள்ளார். நித்தியஸ்ரீ இறந்தது முதல் அவரையும் காணாததால் பெற்றோர் தேடியுள்ளனர்.

மகன் கிடைக்காததால் திருநாவலூர் காவல்நிலையத்தில் தந்தை புகார் அளித்துள்ளார். புகாரைப் பெற்ற போலீசார் நண்பர்களிடம் நடத்திய விசாரனையில் ராமு, நித்யஸ்ரீயை ஒரு தலையாக காதலித்து வந்ததாக தெரிகிறது.

இருவரும் ஒரே சமூகம் என்பதால் தந்தையிடம் சொல்லி நித்யஸ்ரீயைத்தான் திருமணம் செய்து கொள்ளப்போவதாக கூறி வந்துள்ளார்.

செல்போன் பிரச்னையில் நித்யஸ்ரீ திடீரென தற்கொலை செய்து கொண்டதால் ராமு மனமுடைந்துள்ளார். நண்பர்களிடம் நித்யஸ்ரீ குறித்து புலம்பி வந்துள்ளார். அப்போது நண்பர்கள் அவரை சமாதான செய்து தேற்றியுள்ளனர்.

நித்யஸ்ரீயை எரிப்பார்களா? புதைப்பார்களா? என நண்பர்களிடம் கேட்டுள்ளார்.

ஏன் என நண்பர்கள் கேட்டதற்கு எரித்தால் அவருடன் சேர்நது எரிந்துவிடுவேன் என்றும், புதைத்தால் அந்த சவகுழிக்குள் விழுந்து செத்துவிடுவேன் எனக்கூறியுள்ளார்.

நித்தியஸ்ரீ தற்கொலையால் மனமுடைந்து பேசுகிறார் என நினைத்த நண்பர்கள் அவரை சமாதானம் செய்ததுடன் கூடவே இருந்துள்ளனர்.

ஆனால் தொடர்ந்து மன உளைச்சலில் இருந்த ராமு, உடல் உபாதையை கழிக்கச் செல்வதாக கூறிவிட்டு சென்றவர் திரும்பவில்லை எனக்கூறியுள்ளனர்.

இதை அடுத்து திருநாவலூர் போலீசார் நண்ணாவரம் மயான ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் உடல் எரியத் தொடங்கியதும் மேலும் கட்டையை வைத்து அடுக்கிவிட்டு சற்று தூரத்தில் சாப்பிடச் சென்றுள்ளனர்.

சிறிது நேரத்தில் மயானத்திலிருந்து ஒரு இளைஞரின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. அவர்கள் மயானத்தை சுற்றி தேடியபோது ஒன்றும் இல்லாததால், எரிந்து கொண்டிருந்த சடலத்தின் மீது மேலும் கட்டையை அள்ளிப்போட்டு எரித்துவிட்டு சென்றுவிட்டதாக கூறினார்.

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், தடயவியல் நிபுணர்களை வரவழைத்து நித்யஸ்ரீ உடல் எரிக்கப்பட்ட இடத்தில் உள்ள எலும்புகளை ஆய்வு செய்தனர்.

அதில் ஒரு வாட்ச் உள்ளிட்ட பொருட்கள் எரிந்த நிலையில் கிடந்தது. அதை ராமுவின் தந்தையிடம் காட்டி ராமு உடைய பொருட்கள்தான் என்பதை போலீசார் உறுதி படுத்தினர்.

இதை அடுத்து எலும்புகளை கைப்பற்றி தடயவியல் சோதனைக்காக அனுப்பி உள்ளனர். மகனிடம் இதுபோன்ற எண்ணம் இருக்கும் என தனக்கு துளியும் தெரியவில்லை என ராமுவின் தந்தை வேதனையுடன் தெரிவித்தார்.

போலீசாரின் தொடர் விசாரணையில் நண்பர்களிடம் சொல்லிவிட்டு புறப்பட்டவர் நேரடியாக நித்தியஸ்ரீ உடல் எரியூட்டப்பட்ட இடத்திற்கு சென்றிருக்க வேண்டும்.

அங்கு எரிந்து கொண்டிருந்த உடலை பார்த்துக் கொண்டிருந்த ராமு, மயான பணியாளர்கள் சாப்பிடச் சென்றபோது நித்யஸ்ரீ உடல் எரிந்துகொண்டிருந்த தீயில் குதித்து தற்கொலை செய்திருக்க வேண்டும் என்கின்றனர் போலீசார்.

சம்பவ இடத்தில் கிடைத்த முதல் கட்ட தடயங்களின் அடிப்படையில் ராமு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம என போலீசார் யூகிக்கிறார்கள்.

எனினும் தடயவியல் நிபுணர்களின் முழு அறிக்கை வந்த பிறகே ராமு நித்யஸ்ரீ உடலுடன் சேர்ந்து எரித்துக்கொண்டு தற்கொலை செய்தாரா என்பது தெரிய வரும். தடயவியல் நிபுணர்கள் அறிக்கை ராமுவின் தற்கொலையை உறுதி செய்தால் மட்டுமே நீதிமன்றமும் இதனை ஏற்கும்.


காதலி இறந்த துக்கம் தாளாமல் அவர் உடல் எரிந்து கொண்டிருந்து தீயில் குதித்து காதலர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் உளுந்தூர்பேட்டை பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.மாநில உதவிமையம்: 104

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
First published: September 6, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading