ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

Youtube-ஐப் பார்த்து மாணவிக்கு பிரசவம் பார்த்த காதலன் கைது..!

Youtube-ஐப் பார்த்து மாணவிக்கு பிரசவம் பார்த்த காதலன் கைது..!

சௌந்தர்

சௌந்தர்

மருத்துவர்கள் அந்தப் பெண்ணை மேல் சிகிச்சைக்காக சென்னை இராயபுரம் மகப்பேறு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

Youtube பார்த்து காட்டுப் பகுதியில் பிரசவம் பார்த்த காதலனை போலீசார் கைது செய்துள்ளனர்.

கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த சௌந்தர் அங்குள்ள கேஸ் கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளார். இரண்டாமாண்டு படிக்கும் கல்லூரி மாணவியுடன் இவருக்குத் தொடர்பு ஏற்பட்டு, இரண்டு ஆண்டுகளாக இவர்கள் காதலித்து வந்துள்ளனர். கல்லூரி மாணவி கர்ப்பமாகியுள்ளார்.

8 மாத கர்ப்பிணியான அந்த இளம்பெண்ணுக்கு நேற்று திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. வீட்டிற்குத் தெரியாமல் கல்லூரி மாணவிக்கு சொளந்தர் , Youtube-ஐப் பார்த்து காட்டுப் பகுதியில் பிரசவம் பார்க்க முயற்சித்துள்ளார். அப்போது குழந்தையின் கை பகுதி மட்டும் தனியாக முதலில் வந்திருக்கிறது. இளம்பெண்ணின் உடல்நிலை மிகவும் மோசமாகவே, பொன்னேரியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் சென்றுள்ளார் செளந்தர்.

அங்கு மருத்துவ சிகிச்சை அளித்த மருத்துவர்கள் வயிற்றில் இருந்த குழந்தை உயிரிழந்தாகக் கூறி, பெண்ணை மேல் சிகிச்சைக்காக சென்னை இராயபுரம் மகப்பேறு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பெண்ணிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கள்ளக் காதலை மறைப்பதற்காக இதுபோன்று விபரீதமாக பிரசவம் பார்த்து, குழந்தை உயிரிழக்கக் காரணமான செளந்தரை கும்மிடிப்பூண்டி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also see:

First published:

Tags: Crime | குற்றச் செய்திகள், Pregnancy