Home » News » Tamil-nadu » LOVE MARRIAGE ISSUE HUSBAND ATTACKED BY WIFE FAMILY IN ERODE VAI

பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம்: விருந்துக்கு அழைப்பதுபோல் ஏமாற்றி கடத்தலில் ஈடுபட்ட உறவினர்கள் கைது..

ஈரோடு அருகே காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதியை ஏமாற்றி பெண்ணின் வீட்டிற்கு வரவரழைத்து, காதல் கணவர் மற்றும் அவரது உறவினரை அடித்துவிரட்டிவிட்டு மகளை பெற்றோர் சிறைபிடித்துள்ளனர்.

  • Share this:
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள ஔவையார் பாளையத்தை சேர்ந்தவர் அசோக். தனியார் நிறுவனம் ஒன்றின் பணியாற்றி வருகிறார்.இவருடன் கல்லூரியில் படித்த சௌந்தர்யா என்ற பெண்ணை காதலித்து வந்தார். இருவரும் வேறு வேறு சமூகம் என்பதால் திருமணத்திற்கு பெண் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்தனர்.இதனால் கடந்த பத்து நாட்களுக்கு முன்பு பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பை மீறி இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.திருமணத்திற்கு பின் சௌந்தர்யாவின் பெற்றோர் ஏற்றுக்கொள்ளாத நிலையில் அசோக் வீட்டில் இருவரும் வசித்து வந்தனர்.கடந்த வாரம் சௌந்தர்யாவின் பெற்றோர், இருவரையும் வீட்டிற்கு வரவழைத்து மகிழ்ச்சியுடன் உபசரித்து அனுப்பியுள்ளனர்.

அதனைத்தொடர்ந்து சௌந்தர்யா தனது பெற்றோர் காதல் திருமணத்தை ஏற்றுக்கொண்டதாக கணவர் அசோக்கிடம் கூறி வந்துள்ளார். வெள்ளிக்கிழமை மீண்டும் சௌந்தர்யாவின் வீட்டிலிருந்து கணவன் - மனைவி இருவரையும் அழைத்துள்ளனர்.

மேலும் படிக்க.. இளைஞர்களை வழிநடத்துவதன் மூலம் மட்டுமே சிறப்பான எதிர்காலத்தை அடைய முடியும்.. நடிகை திரிஷா


அசோக் தனது காதல் மனைவி, தம்பி மற்றும் நண்பர்களுடன் காரில் சௌந்தர்யா வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு இருந்த பத்துக்கும் மேற்பட்டவர்கள் அசோக், அவரது தம்பி, நண்பர்களை அரிவாள், உருட்டு கட்டை உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். தடுத்த மகளை பிடித்து வீட்டின் அறை ஒன்றில் பூட்டிவிட்டு, அசோக் உள்ளிட்டவர்களை அடித்து துரத்தினர்.



பலத்த காயங்களுடன் அசோக் மற்றும் அவரது நண்பர்கள் கோபி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தனர். தொடர்ந்து தனது மனைவியை மீட்டுத்தரும்படி கோபிசெட்டிபாளையம் காவல்நிலையத்தில் அசோக் புகார் அளித்துள்ளார்.
 

காதல் திருமணம் செய்த தம்பதியை பிரிக்க நைசாக பேசி வீட்டுக்கு வரவைத்து, மகளை பிடித்து வைத்துக்கொண்டு அவரது கணவர் உள்ளிட்டவர்களை பெற்றோர் அடித்து விரட்டிய சம்பவம் ஈரோடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
First published: October 12, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading