திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த புல்லூர் பகுதியை சேர்ந்தவர் கனகராஜ் என்கின்ற கனகு (26). இவர் அதே பகுதியை சேர்ந்த குமரேசன் என்பவரின் மகள் ஜெயபிரியா (23) என்பவரை காதலித்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இதனால் இவர்கள் ஊரை மதிக்காமல் திருமணம் செய்து கொண்டதாக கூறி ஊர் பஞ்சாயத்தினர் மாப்பிள்ளை வீட்டாருக்கு 1.5 லட்சம் ரூபாய் அபராதமும், பெண் வீட்டாருக்கு ரூ 1 லட்சம் அபராதம் வித்து தீர்ப்பு அளித்து இருந்தனர். அபராத தொகை கட்டமுடியததாலும், ஊர் பிரச்சனைகள் தாங்க முடியாமல் கனகு காதல் மனைவியுடன் வேலை தேடி சென்னைக்கு சென்றவர் அங்கேயை வேலை செய்த வந்த நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையால் வேலை இழுந்து கடந்த அக்டோபர் மாதன் ஊர் திரும்பியுள்ளார்.
தகவல் அறிந்து அதிமுக பிரமுகர்களான ஊர் நாட்டாமைகள் எல்லப்பன் மற்றும் நாகேஷ் ஆகியோர் காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதியனருக்கு அபராதம் தொகையை கட்ட வலியுறுத்தினர். இதனை தொடர்ந்து கனகு அபராதம் தொகை கட்ட முடியாமல் கடந்த நவம்பர் 10ம் தேதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்துள்ளார்.
இதன் அடிப்படையில் வாணியம்பாடி சரக காவல் உட்கோட்டம் சார்பில் காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ள புகார் மனுக்கள் மீது தீர்வுக்கான முகாம் கடந்த நவம்பர் 18 ம் தேதி தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. அப்போது காதல் திருமணம் செய்து கொண்ட கனகராஜ், ஜெயபிரியா ஆகியோர் மற்றும் இரு குடும்பத்தினர்களுக்கு ஊர் சார்பில் எந்த நிபந்தனைகளுக்கு விதிக்கக்கூடாது என்று ஊர் நாட்டாமைகளுக்கு அறிவுறுத்தப்பட்டு, சமரசம் செய்து போலீசார் அனுப்பி வைத்தனர்.
போலீசார் சமரசத்திற்கு பிறகும் ஊர் பஞ்சாயத்தினர் பெண்ணின் தாய், தந்தை மற்றும் தம்பி வேலை செய்யும் இடங்களில் அவர்களை ஊரை விட்டு ஒதுக்கி இருப்பதாக கூறி அவர்களுக்கு வேலை வழங்க கூடாது என்று கூறிவந்ததால் அவர்கள் வேலை இழந்து கஷ்டத்தில் வாழ்ந்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று பொங்கல் பண்டிகை முன்னிட்டு பெண்ணின் தந்தை குமரேசன் மற்றும் குடும்பத்தினர் ஊரில் உள்ள கோயிலுக்கு சாமி கும்பிட சென்ற போது அங்கே அதிமுக பிரமுகர்களான எல்லப்பன், நாகேஷ் உட்பட 6 பேர் அவர்களை கோயிலுக்குள் நுழைய விடாமல் தடுத்தி நிறுத்தி உள்ளனர். மேலும் உங்களை ஊரைவிட்டு ஒதுக்கி இருப்பதாலும், ஊருக்கு கட்ட வேண்டிய அபராத தொகை ரூ. 2.5 லட்சம் கட்டிய பிறகு தான் கோயிலுக்குள் சாமி கும்பிட அனுமதிப்போம் என்ற வாக்குவாதத்தில் ஈடுபட்டு பின்னர் குமரேசன் மற்றும் அவரது மகன் வெங்கடேசன் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில் படுகாயம் அடைந்த குமரேசன் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கே ஆளும் கட்சியினர் அழுத்தத்தால் குமரேசனுக்கு சரிவர சிகிச்சை அளிக்காமல் அவரை டிஸ்சார்ஜ் செய்ததாக உறவினர்கள் தெரிவித்தனர்.
மேலும் அராஜகத்தில் ஈடுபட்டு வரும் அதிமுக பிரமுகர்களான எல்லப்பன், நாகேஷ் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்யும் வரை மருத்துவமனை வளாகத்தை விட்டு வெளியில் வரமாட்டேன் என்று கூறி பாதிக்கப்பட்ட குமரேசன் போராடத்தில் ஈடுபட்டு வருகிறார். இது குறித்து திம்மாம்பேட்டை போலீசாரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்ட போது இது உள்ளூர் பிரச்சனை வேறு எதுவும் இல்லை என்று பதில் கூறினார். இச்சம்பவம் குறித்து திம்மாம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்