Home /News /tamil-nadu /

”பெரியார் பஸ் ஸ்டாண்டில் இனி மல்லியும் இட்லியும் மணக்காதா?”- ஒரு மதுரைவாசியின் குமுறல்

”பெரியார் பஸ் ஸ்டாண்டில் இனி மல்லியும் இட்லியும் மணக்காதா?”- ஒரு மதுரைவாசியின் குமுறல்

பெரியார் பேருந்து நிலையம்

பெரியார் பேருந்து நிலையம்

இட்லியும் மல்லிப்பூவும் மட்டுமில்லைங்க...பஸ் ஸ்டாண்ட் கூட எங்களுக்குப் பெருசுதான்.

  • News18
  • Last Updated :
மதுரையில, பெரியார் பஸ் ஸ்டாண்ட்-னா அம்பூட்டு பேமஸா? இட்லியும் மல்லிப்பூவும் மட்டுமில்லைங்க... பஸ் ஸ்டாண்ட் கூட எங்களுக்குப் பெருசுதான். ஏன்னு கேக்குறீங்களா? பெருசா ஒண்ணுமில்லைங்க. மதுரை, மாடர்ன் கிராமமா இருக்குறதுக்கான அடையாளமே எங்க பெரியார் பஸ் ஸ்டாண்ட்தான்.

மதுரையச் சுத்தி இருக்கும் பதினெட்டுப் பட்டியும் டவுனுக்குக் கிளம்புனா பெரியார் பஸ் ஸ்டாண்டுலதான் வந்து நிக்கணும். விடியக் கருக்குல நாலு மணிக்கு வந்தீங்கன்னு வச்சுக்கோங்க, அப்டியே சுடசுட இட்லிய சாம்பாருல கொழச்சு அடிக்கலாம். அஞ்சு மணிக்கெல்லாம் தண்டட்டிக் கிழவிங்க சந்தைய விரிக்க ஆரம்பிச்சுருங்க. ஸ்டிக்கர் பொட்டுல இருந்து எவர்சில்வர் தட்டுமுட்டுச் சாமான் வரைக்கும் அத்தனையும் கிடைக்கும் லோக்கல் மால் எங்க பெரியார் பஸ் ஸ்டாண்ட் தெரியுமா?

உசிலம்பட்டிக்காரனா இருந்தாலும் யூ.எஸ்.ஏ-க்காரனா இருந்தாலும் பெரியாரக் கடந்துதான் போகணும். மால்காரன் எல்லாம் வர்றதுக்கு முன்னாடியே எங்க அப்பத்தாவும் தாத்தனும் இங்க மல்டி ப்ராண்ட் சிஸ்டத்தையே கொண்டு வந்துடானுங்க. அதனால, உள்ளூர்ல சுத்த வேற இடமேத் தேடிப் போகத் தேவையில்ல.

காலியில, இட்லிக்கு அப்றம் மதியம் கறி தோசைய முடிச்சோமா அப்டியே நொறுக்குற வெயிலுக்கு ஒரு ஜிகர்தாண்டாவ போட்டோமான்னு ‘டாப்’ அடிக்க ஏத்த இடம். நாலு மாசி வீதியையும் சுத்திமுடிச்சா ஷாப்பிங் ஓவர். அங்கேயே டின்னருக்கு பரோட்டாவும் சால்னாவும் கொழப்பி அடிச்சாத் தாங்க தெரியும் சொர்க்கம் எங்க இருக்குன்னு...

இன்னைக்கி, ஸ்மார்ட் சிட்டியா மாத்துறோம்ன்னு அங்காளி பங்காளிகளத் தொரத்திவிட்டாச்சு. ஸ்மார்ட்டா மாறப்போறம்ன்னு பெரியார் பஸ் ஸ்டாண்டையே இடிச்சு நொறுக்கி வச்சிருக்கோம். புதுமைய ஏத்துக்கத்தான் வேணும். ஆனாலும் அந்த சந்தோஷத்தை எல்லாம் இனி எங்க பங்காளி போய்த் தேடப்போறோம்..?

-ராகினி

 

Published by:Rahini M
First published:

Tags: Madurai, Periyar Bus Stand

அடுத்த செய்தி