ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

காதல் தோல்வியால் தற்கொலைக்கு முயன்ற இளைஞர் உயிரிழப்பு.. முறையாக சிகிச்சையில்லை என செவிலியர் மீது உறவினர்கள் தாக்குதல்..

காதல் தோல்வியால் தற்கொலைக்கு முயன்ற இளைஞர் உயிரிழப்பு.. முறையாக சிகிச்சையில்லை என செவிலியர் மீது உறவினர்கள் தாக்குதல்..

காதல் தோல்வியால் தற்கொலைக்கு முயன்ற இளைஞர் உயிரிழப்பு.. முறையாக சிகிச்சையில்லை என செவிலியர் மீது உறவினர்கள் தாக்குதல்..

மயிலாடுதுறை மாவட்டத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட இளைஞருக்கு முறையா சிகிச்சை அளிக்கவில்லை என்று குற்றம் சாட்டி அரசு மருத்துவமனை செவிலியர் மீதும் மருத்துவமனை மீதும் தாக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது கைது நடவடிக்கை பாயுமா?

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  மயிலாடுதுறை அரசு மருத்துவமனை தாக்கி உடைக்கப்பட்ட காட்சிகள் தான் இவை. காதல் தோல்வியால் இறந்த இளைஞருக்கு முறையாக சிகிச்சை கொடுக்கவில்லை என்று குற்றம்சாட்டி செவிலியரையும் மருத்துவமனையும் ஒரு கும்பல் தாக்கி சேதப்படுத்தியுள்ளது.

  மயிலாடுதுறை அருகே உள்ள கிளியனூர் பகுதியை சேர்ந்தவர் 24 வயதான விஜயசெல்வன். பாலிடெக்னிக்கில் எலக்ட்ரானிக்கல் பிரிவில் பட்டம் பெற்று வேலை தேடி வந்தார். இதற்கிடையே அதே பகுதியை சேர்ந்த பெண்ணுடன் விஜய செல்வனுக்கு காதல் ஏற்பட்டுள்ளது. காதல் விவகாரம் இருவீட்டாருக்கு தெரியவந்ததும் பெண் வீட்டார் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால் காதல் ஜோடிகள் விரக்தியில் இருந்துள்ளது. இதற்கிடையே தீபாவளியன்று காதலி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக விஜயசெல்வனுக்கு தகவல் வந்ததுள்ளது. காதலிக்கு என்ன ஆனது என்று தெரியாமல் இருந்த அவரும் ஞாயிறு அன்று காலை விஷம் குடித்துள்ளார்.

  மேலும் படிக்க...பழனியில் இடத்தகராறு மோதல்.. துப்பாக்கியால் சுடப்பட்டவர் உயிரிழப்பு..

  வீட்டிலேயே மயங்கி விழுந்த அவரை மீட்ட உறவினர்கள் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மருத்துவர்கள் போராடியும் விஜயசெல்வன் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. இந்நிலையில் மருத்துவமனையில் முறையாக சிகிச்சை அளிக்கவில்லை என குற்றம்சாட்டி விஜயசெல்வனின் உறவினர்கள் ரகளையில் ஈடுபட தொடங்கினர்.

  மேலும் பணியில் இருந்த தற்காலிக செவிலியர் கீர்த்திகாவை தாக்கியவர்கள் கணினி மற்றும் ஈசிஜி இயந்திரத்தை சேதப்படுத்தினர். மருத்துவமனை காவலர்கள் வந்ததும் கூட்டம் கலைந்தது.

  மேலும் படிக்க.. செய்தி வாசிப்பாளர் பணி ஆசைக் காட்டி, இளம்பெண்ணிடம் நூதன கொள்ளை - மோசடி தம்பதி கைது

  செவிலியர் கீர்த்தனா மயிலாடுதுறை காவல்நிலையத்தில் தாக்கப்பட்டது தொடர்பாக புகார் அளித்தார். மேலும் செவிலியரை தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் உடற்கூராய்வு செய்யமாட்டோம் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

  இதனால் பதற்றம் ஏற்பட மருத்துவமனையில் ரகளையில் ஈடுபட்ட விஜயசெல்வனின் சகோதரர் வீரபாண்டி, சகோதரி சங்கீதா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

  இளைஞரின் தற்கொலையால் அரசு மருத்துவமனை செவிலியர் தாக்கப்பட்டு கருவிகள் சேதப்படுத்தப்பட்டது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  ------------------------------------------------------------------------------------------------

  மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.மாநில உதவிமையம்: 104

  சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Commit suicide, Crime | குற்றச் செய்திகள், Love failure, Mayiladuthurai