முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ஜாதி மறுப்பு திருமணம்... பெற்றோர்கள் மிரட்டுவதால் பாதுகாப்பு கோரி புதுமண பெண் புகார் மனு

ஜாதி மறுப்பு திருமணம்... பெற்றோர்கள் மிரட்டுவதால் பாதுகாப்பு கோரி புதுமண பெண் புகார் மனு

பிரியதர்ஷினி - தினேஷ்குமார்

பிரியதர்ஷினி - தினேஷ்குமார்

ஜாதி பெயரைச் சொல்லி பிரிப்பதற்கு முயற்சிக்கிறார்கள் என்று கூறி மணப்பெண் புகார் அளித்துள்ளார்.

  • Last Updated :

ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டதால் பெற்றோர்கள் மிரட்டுவதால் பாதுகாப்பு கேட்டு புதுமண பெண், கணவருடன் கரூர் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளிக்க வந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

கரூரில் இருவேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் காதலித்து திருமணம் செய்துகொண்ட புதுமண பெண் தனது கணவருடன் எஸ்.பி. அலுவலகத்திற்கு பெற்றோர்கள் மீது புகார் அளித்தார். அந்த புகார் மனுவில் ஈரோடு மாவட்டம், கருங்கல்பாளையம் கிராமத்தை சார்ந்த ராஜா என்பவரின் மகள் பிரியதர்ஷினி ஆகிய நானும், கரூர் மாவட்டம், சணப்பிரட்டி கிராமம், மகாலிங்கம் மகன் தினேஷ்குமார் என்பவரும் கடந்த நான்கு வருடமாக காதலித்து வந்தோம்.

நாங்கள் இருவரும் இருவேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். எனவே எங்கள் காதல் விவகாரத்தை எங்களின் பெற்றோரிடம் தெரிவித்தோம். எனது தந்தை ராஜா மற்றும் எனது தாயார் காவேரி, எனது அண்ணன் லட்சுமணன் ஆகியோர் எங்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், எங்கள் பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி நாங்கள் இருவரும் மாயனூரில் உள்ள அருள்மிகு செல்லாண்டியம்மன் திருக்கோவிலில் இந்து முறைப்படி தாலிகட்டி, மாலை மாற்றி கொண்டு சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டோம்.

Must Readபெரியார் கண்ட கனவை நனவாக்க கூடிய வகையில், ஸ்டாலின் தலைமையிலான அரசு இயங்குகிறது - திருமாவளவன்

நாங்கள் இருவரும் இந்து திருமணச் சட்டப்படி திருமண வயதை எட்டியுள்ளோம். எனது பெற்றோரிடம் இருந்து எனது கணவரையும், என்னையும் காப்பாற்றி பாதுகாப்பு வழங்குமாறும் கேட்டுக் கொள்கிறேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எனது, பெற்றோர்கள் எங்கள் இருவரையும் சேர்த்து வைப்பதாக கூறி எங்களை வரச்சொல்லி மிரட்டுகின்றனர். ஜாதி பெயரைச் சொல்லி பிரிப்பதற்கு முயற்சித்து வருகிறார்கள். இவ்வாறு கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

top videos

    செய்தியாளர் - தி.கார்த்திகேயன், கரூர்

    First published:

    Tags: Karur, Love marriage