மெரினாவில் தொடர்ந்து நீடிக்கும் தடை: பட்டினப்பாக்கத்தில் குவியும் மக்கள்

சென்னை மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல தடை தொடர்ந்து நீடிப்பதால் பட்டினம்பாக்கத்தில் பொது மக்கள் வரத்து அதிகரித்துள்ளது.

மெரினாவில் தொடர்ந்து நீடிக்கும் தடை: பட்டினப்பாக்கத்தில் குவியும் மக்கள்
பட்டினப்பாக்கம் கடற்கரை
  • News18 Tamil
  • Last Updated: September 6, 2020, 10:42 PM IST
  • Share this:
சென்னை மெரினா கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமையன்று ஆயிரக்கணக்கான மக்கள் கூடுவது வழக்கம். கொரோனா ஊரடங்கைத் தொடர்ந்து இரண்டு மாதகால ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்குக்குபிறகு, இன்றுதான் ஊரடங்கில்லா முதல் ஞாயிற்றுக்கிழமை. அதனால், தி.நகர் உள்ளிட்ட சென்னையில் முக்கியப் பகுதிகள் கூட்டம் அலைமோதியது. இருப்பினும், மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல தடை நீடிக்கிறது.

இதையடுத்து மெரினாவை ஒட்டியுள்ள பட்டினம்பாக்கம் கடற்கரை பகுதியில் ஏராளமானோர் குடும்பத்துடன் வந்து பொழுதை கழிக்கின்றனர். அந்த பகுதியில் ஏராளமான மீன்கள் கிடைப்பதால் அவற்றை வாங்கிச் செல்வதற்கும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் கடற்கரை சாலை முழுக்க வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.


பொதுமக்கள் வருகை அதிகரித்ததால் இந்த பகுதி முழுக்க ஏராளமான கடைகள் புதியதாக முளைக்கத் தொடங்கியுள்ளன. இதனால் பட்டினம்பாக்கம் பகுதி குட்டி மெரினாவாக உருவெடுத்துள்ளது.
First published: September 6, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading