• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • EXCLUSIVE தமிழக மின்வாரியத்தில் நஷ்டம் தொடர்ந்து அதிகரிப்பு: விரைவில் மின் கட்டணம் உயர வாய்ப்பு

EXCLUSIVE தமிழக மின்வாரியத்தில் நஷ்டம் தொடர்ந்து அதிகரிப்பு: விரைவில் மின் கட்டணம் உயர வாய்ப்பு

கோப்புப் படம்

கோப்புப் படம்

தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் நஷ்டம் தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருப்பதால், மின் கட்டண உயர்வு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • Share this:
தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் நஷ்டம் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. 2018 -19ம் நிதியாண்டில், மின் பகிர்மான கழகத்தின் நஷ்டம் 12,623 கோடி ரூபாயாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், 2018-19ம் ஆண்டில், அதற்கு முந்தைய ஆண்டை காட்டிலும் 63 சதவிதம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. நிதிக்குழு பரித்துரைப்படி, 80,000 ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட ஊதிய உயர்வு மற்றும் 2014ம் ஆண்டில் இருந்து மின்கட்டணத்தை உயர்த்தாமல் இருப்பது தான், இந்த நஷ்டம் ஏற்பட்ட முக்கிய காரணமாக கூறப்பட்டுள்ளது.

2013-14ல், தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் நஷ்டம் 13,985 கோடி ரூபாயாக இருந்த நிலையில், 2015-16ல் 5,750 கோடி ரூபாயாக குறைந்தது. 2017-18ல் 7,761 கோடி ரூபாயாக இருந்த நஷ்டம் 2018-19ல் 12,623 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

Also read: வேளாண் மசோதாக்களை நிறைவேற்ற இன்று கூடுகிறது ராஜ்ய சபா- பா.ஜ.கவுக்கு இருக்கும் சவால்கள் என்ன?

இந்த நஷ்டத்தை ஈடுசெய்ய, மின்கட்டணத்தை அதிகரிப்பதை தவிர வேறு வழியில்லை என்று அரசு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 6 ஆண்டுகளாக கட்டணம் உயர்த்தப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டும் அதிகாரிகள், நிலக்கரியின் விலை, ரயில் கட்டணம், மின் உற்பத்தி சாதனங்களின் பராமரிப்புச் செலவு என அனைத்தும் 2 மடங்கிற்கும் அதிகமாக அதிகரித்துள்ளதாக கூறுகின்றனர். மின்சாரத்தை வாங்கும் விலைக்கும், விற்பனை செய்யப்படும் தொகைக்கும் 2 ரூபாய் வித்தியாசம் இருக்கும் நிலையில், அதுவும் நஷ்டத்தை அதிகரித்து வருவதாக கூறுகின்றனர்.



2014ம் ஆண்டில், 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு மட்டும் மின்கட்டணம் அதிகரிக்கப்பட்டதால், மின்சார பகிர்மான கழகத்திற்கு எந்த லாபமும் ஏற்படவில்லை என்று கூறும் அதிகாரிகள், இலவச மின்சாரத்திற்கு வழங்கப்படும் மானிய தொகையும் கால தாமதமாகவே கிடைப்பதாக கூறியுள்ளனர்.

இதுபோன்ற காரணங்களால், மின் கட்டண உயர்வு கட்டாயம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கட்டண உயர்வு தேர்தல் காலத்தில் இருக்காது என்ற கருத்து முன்வைக்கப்பட்டாலும், தேர்தல் முடிந்த உடன், மின் கட்டண உயர்வுதான் முதல் நடவடிக்கையாக இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Rizwan
First published: