• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • இறையருளால் சிறப்பான தீர்ப்பு கிடைத்துள்ளது - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

இறையருளால் சிறப்பான தீர்ப்பு கிடைத்துள்ளது - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

முதலமைச்சர் பழனிசாமி

முதலமைச்சர் பழனிசாமி

அதிமுக உறுப்பினராகவே இல்லாத தினகரனின் கருத்து அதிமுகவுக்கு எப்படி பொருந்தும் என்று முதலமைச்சர் கேள்வி

  • News18
  • Last Updated :
  • Share this:
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என்று  சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், தேர்தல் வந்தால் சந்திக்க தயார் என்று முதலமைச்சர் பழனிசாமி நம்பிக்கை தெரிவித்தார்.

செய்தியாளர்களை சந்தித்த அவர், இறையருளால் சிறந்த தீர்ப்பு கிடைத்துள்ளதாக தெரிவித்தார். மேலும், 20 தொகுதிகளிலும் தேர்தல் அறிவிக்கப்பட்டால் தேர்தலை சந்திக்க தயார் என்றும் அனைத்து தொகுதியிலும் வெற்றி பெறுவோம் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

பத்திரிகையாளர்கள், “நீதிமன்றத்தின் தீர்ப்பு பின்னடைவு அல்ல, இது ஒரு அனுபவம்” என்று தினகரன் பேசிய கருத்தை எப்படி பார்க்கிறீர்கள் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, என்ன அனுபவம் என்று எனக்கு தெரியவில்லை என்று கூறிய அவர், அதிமுக உறுப்பினராகவே இல்லாத தினகரனின் கருத்து அதிமுகவுக்கு எப்படி பொருந்தும் என்றும் கேள்வி எழுப்பினார்.

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பேசும்போது, தேர்தல் வந்தால் அனைத்து தொகுதியிலும் வெற்றி பெறுவோம் என்றார், மேலும் உயர்நீதி மன்ற தீர்ப்பினால் தர்மம் நிலைநாட்டப்பட்டுள்ளதாக கூறினார்.

அமைச்சர் சி. வி. சண்முகம் பேசும்போது, இது அதிமுகவுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்றார். துரோகிகளுக்கு சரியான பாடம் புகட்டப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதையும் பாருங்களேன்..
எத்தனை வழக்குகள் தொடர்ந்தாலும் சந்திக்கத் தயார்- ஸ்டாலின்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Saroja
First published: