முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ராஜேந்திர பாலாஜி வெளிநாடு தப்பி செல்வதை தடுக்க லுக் அவுட் நோட்டீஸ்?

ராஜேந்திர பாலாஜி வெளிநாடு தப்பி செல்வதை தடுக்க லுக் அவுட் நோட்டீஸ்?

ராஜேந்திர பாலாஜி

ராஜேந்திர பாலாஜி

ராஜேந்திர பாலாஜி பெங்களூருவில் இருப்பதாக வந்த தகவல் அடிப்படையில் ஒரு தனிப்படை பெங்களூரு விரைந்தது,

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

பணமோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வெளிநாடு தப்பி செல்வதை தடுக்க லுக் அவுட் நோட்டீஸ் தர முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆவினில் வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்ததாக எழுந்த புகாரில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அவரின் உதவியாளர்கள் முத்துப்பாண்டி, பாபுராஜ், பலராமன் உள்ளிட்ட 4 பேர் மீது விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் இருவேறு வழக்குகளில் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி ராஜேந்திர பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை அடுத்து தலைமறைவாக உள்ள ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட 4 பேரை பிடிக்க குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் கணேஷ்தாஸ் தலைமையில் முதலில் 3 தனிப்படை அமைக்கப்பட்டது.

Also Read : தமிழகத்தில் 34 பேருக்கு ஒமைக்ரான் தொற்று - சுகாதாரத்துறை தகவல்

இந்நிலையில் பணமோசடி வழக்கில் ராஜேந்திர பாலாஜி தலைமறைவாக உள்ள நிலையில் அவர் வெளிநாடு தப்பி செல்வதை தடுக்க லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ராஜேந்திர பாலாஜி பெங்களூருவில் இருப்பதாக வந்த தகவல் அடிப்படையில் ஒரு தனிப்படை பெங்களூரு விரைந்தது, தற்போது தென்காசி குற்றாலம், கேரளாவில் இருப்பதாக வந்த தகவலையடுத்து 2 தனிப்படை அங்கு விரைந்துள்ளன. ராஜேந்திர பாலாஜியை தனிப்படை போலீசார் விரைவில் கைது செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

First published:

Tags: Rajendra balaji