ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

வாழ்க தமிழ்நாடு...பாரதியார் பாட்டு...சட்டமன்ற உரையை நிறைவு செய்த ஆளுநர்

வாழ்க தமிழ்நாடு...பாரதியார் பாட்டு...சட்டமன்ற உரையை நிறைவு செய்த ஆளுநர்

ஆளுநர் உரை

ஆளுநர் உரை

வாழ்க தமிழ்நாடு, வாழ்க பாரதம், ஜெய்ஹிந்த் எனக் கூறி ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையை நிறைவு செய்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

ஆண்டின் முதல் சட்டமன்றக் கூட்டத் தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. ஆளுநரின் தமிழ்நாடு குறித்த கருத்து சர்ச்சையான நிலையில், அவர் சட்டமன்றம் வந்ததும் தமிழ்நாடு வாழ்க என திமுக எம்.எல்.ஏ.க்கள் முழக்கமிட்டனர். எனினும் உரையைத் தொடங்கிய ஆளுநர், ‘முதல் கூட்டத்தில் உரையாற்றுவதில் பெரு மகிழ்ச்சி. என் இனிய தமிழக சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் புத்தாண்டு, பொங்கல் நல்வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டார்.

தொடர்ந்து அரசின் கொள்கை விளக்கங்கள், நலத் திட்டங்களின் நிலை தொடர்பாக 40 நிமிடங்கள் வரை உரையாற்றினார். இறுதியாக  ‘வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!

வாழிய பாரத மணித்திரு நாடு’ என்ற பாரதியாரின் பாடலை சுட்டிக்காட்டிய அவர், வாழ்க தமிழ்நாடு, வாழ்க பாரதம், ஜெய்ஹிந்த் எனக் கூறி உரையை நிறைவு செய்தார். ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு வாசித்தார்.

First published:

Tags: TN Assembly