Home /News /tamil-nadu /

புதிய மாவட்டமாக உருவாகியும் தீராத செங்கல்பட்டு மக்களின் ஏக்கம்

புதிய மாவட்டமாக உருவாகியும் தீராத செங்கல்பட்டு மக்களின் ஏக்கம்

செங்கல்பட்டு

செங்கல்பட்டு

செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மைதானத்தில்தான் நடைபயிற்சி செய்வது முதல், பேட்மின்டன். கிரிக்கெட் வாலிபால் விளையாடுவது வரை சகலமும் நடைபெற்று வருகிறது. 

    புதிய மாவட்டமாக உருவாகி இரு ஆண்டுகள் கடந்துவிட்டபோதிலும் செங்கல்பட்டு நகரில் பொதுவான விளையாட்டு மைதானமோ, விளையாட்டு அரங்கமோ ஏற்படுத்தப்படாதது அப்பகுதி மக்களுக்கு பெரிய ஏக்கமாக மாறியுள்ளது.

    செங்கல்பட்டு நகரில் பொதுவான ஒரு விளையாட்டு மைதானம் இல்லை. ஆதலால் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மைதானத்தில்தான் நடைபயிற்சி செய்வது முதல், பேட்மின்டன். கிரிக்கெட் வாலிபால் விளையாடுவது வரை சகலமும் நடைபெற்று வருகிறது.

    தனியார் கல்வி நிறுவன மைதானங்களில் அனுமதி இல்லாத நிலையில் செங்கல்பட்டு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வசிக்கும் விளையாட்டு ஆர்வலர்களுக்கு ஒரே புகலிடம் அரசு மருத்துவக் கல்லூரி மைதானம்தான். ஆனால் அங்கு விளையாடுவதில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதாகவும் மக்கள் கூறுகின்றனர்.

    அனைத்து மாவட்டங்களிலும் விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் விளையாட்டு மைதானமும், உள்விளையாட்டு அரங்கமும் உள்ளன. அதுபோல் செங்கல்பட்டு மாவட்டத்திலும் எஸ்டிஏடி சார்பில் அமைக்கப்பட வேண்டும் என்றும் கொளவாய் ஏரியில் நடைபயில்வோருக்கு வசதி செய்து அழகூட்டலாம் என்றும் முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Also Read : அதிகாலையிலேயே வேதா இல்லத்தை சுற்றி வளைத்த போலீஸ்...ஜெயலலிதா கைது: 25 ஆண்டுகள்
     பொதுவான விளையாட்டு மைதானம் இல்லாததால் விளையாட்டுப் பயிற்சியிலும், நடைபயிற்சியிலும் பெண்கள் ஈடுபடுவது குறைந்துவிட்டதாகக் கூறும் செங்கல்பட்டு நகரவாசிகள், தங்களது 20 ஆண்டு கோரிக்கையை அரசு நிறைவேற்றித் தர வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.
    Published by:Vijay R
    First published:

    Tags: Chengalpattu

    அடுத்த செய்தி