அகரம் அகழாய்வில் நீளவடிவ பச்சை நிற பாசிகள் கண்டெடுப்பு 

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அகரம் அகழாய்வில் நீளவடிவ பச்சை நிற பாசிகள் கண்டெடுக்கப்பட்டன.

அகரம் அகழாய்வில் நீளவடிவ பச்சை நிற பாசிகள் கண்டெடுப்பு 
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அகரம் அகழாய்வில் நீளவடிவ பச்சை நிற பாசிகள் கண்டெடுக்கப்பட்டன.
  • Share this:
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அகரம் அகழாய்வில் நீளவடிவ பச்சை நிற பாசிகள் கண்டெடுக்கப்பட்டன. திருப்புவனம் அருகே கீழடியில் 6-ம் கட்ட அகழாய்வு பணி பிப்.19-ம் தேதி முதல் நடந்து வருகிறது. கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் ஆகிய 4 இடங்களில் பணிகள் நடந்து வருகின்றன.

அவற்றில் செங்கல் கட்டுமானம், விலங்கு எலும்பு, மனித எலும்புகள், மண் பானைகள், ஓடுகள், சிறிய உலைகலன் உள்ளிட்டவை கண்டறியப்பட்டன. அகரத்தில் ஆறு குழிகள் தோண்டப்பட்டு வருகின்றன. இங்கு நீள வடிவ பச்சை நிற பாசிகள் கண்டெடுக்கப்பட்டன.
இதுவரை கீழடி பகுதியில் நடந்த அகழாய்வுகளில் வட்ட மற்றும் உருண்டை வடிவ பாசிகள் மட்டுமே கண்டெடுக்கப்பட்டன.  இந்நிலையில் முதன் முறையாக நீள வடிவ பாசிகள் கண்டெடுக்கப்பட்டன. இந்த பாசிகள் தொழில் வர்த்தக பயன்பாட்டில் இருந்துள்ளன.

மேலும் படிக்க..சவால்களை முறியடிக்க புத்தரின் கொள்கையே தீர்வு: பிரதமர் மோடி

மேலும் இந்த வகை பாசிகளை வியாபாரிகள், மிகப் பெரிய அள்வில் வியாபாரத்துக்கு பயன்படுத்தி இருக்கலாம் எனவும் இந்த பாசிகள் எதற்காக பயன்படுத்தினர்? எந்த வகையை சார்ந்தவை? எத்தனை ஆண்டுகள் முன்பு பயன்படுத்தியவை என பின்னர் தெரியவரும் என்று தொல்லியல்துறையினர் தெரிவித்தனர்.
First published: July 4, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading