ஓசூர் அருகே அடிப்படை வசதி செய்து தராததால் 3 கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு!

சாலைவசதி உள்ளிட்ட அடிப்படை வசதி இல்லை என 500 க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர்.

news18
Updated: April 18, 2019, 10:23 AM IST
ஓசூர் அருகே அடிப்படை வசதி செய்து தராததால் 3 கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு!
கோப்புப் படம்
news18
Updated: April 18, 2019, 10:23 AM IST
ஓசூர் அருகே மூன்று கிராம மக்கள் தேர்தல் புறக்கணித்ததால் தற்போது வரை ஒரு வாக்குக்கூட பதிவாகாத நிலையில் வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை அருகே உள்ள கவுனூர்,தோட்டேதேவனஹள்ளி, குள்ளட்டி ஆகிய மூன்று கிராமங்கள் வனப்பகுதியில் அமைந்திருப்பதால் இதுவரை தார்சாலை அமைத்துதரவில்லை என குற்றம் சாட்டி 500 வாக்காளர்கள்  தேர்தலைப் புறக்கணித்துள்ளனர்.

குள்ளட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில்  இதுவரை ஒருவாக்குக்கூட பதிவாகாத நிலையில், தேன்கனிக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் மூன்று கிராம வாக்காளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் விருதுநகர் மாவட்டம், விருதுநகர் அருகே மீனாட்சிபுரத்தில் சாலைவசதி உள்ளிட்ட அடிப்படை வசதி இல்லை எனகூறி கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு செய்துள்ளனர். இங்கு மொத்தம் 240 குடும்பம் வசிக்கும் கிராமத்தில் 440 வாக்காளர்கள் வாக்களிக்காமல் உள்ளனர்.
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 18, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...