வேலூரில் எங்கள் வேட்பாளர் செலவு செய்த தொகையை திருப்பித் தருவார்களா?- வாக்களித்தபின் சீமான் பேட்டி

”வேலூர் தொகுதியில் முறைகேடு செய்த வேட்பாளரை தான் தகுதி நீக்கம் செய்திருக்க வேண்டும்”

வேலூரில் எங்கள் வேட்பாளர் செலவு செய்த தொகையை திருப்பித் தருவார்களா?- வாக்களித்தபின் சீமான் பேட்டி
”வேலூர் தொகுதியில் முறைகேடு செய்த வேட்பாளரை தான் தகுதி நீக்கம் செய்திருக்க வேண்டும்”
  • News18
  • Last Updated: April 18, 2019, 12:53 PM IST
  • Share this:
மோடி  அல்லது ராகுல் என யார் ஆட்சிக்கு வந்தாலும் எந்தவித மாற்றம் நடைபெறுவதில்ல. பொருளாதார கொள்கையில் மாற்றம் தேவை என சீமான் வாக்களித்த பின் பேசியுள்ளார். 

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர், சீமான் சாலிகிராமத்தில் உள்ள சின்ன கரியப்பா பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வரிசையில் நின்று வாக்களித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் “தேர்தல் ஆணையம் பொறுப்பற்ற தன்மையுடன் செயல்பட்டுள்ளது. வேலூர் தொகுதியில் முறைகேடு செய்த வேட்பாளரை தான் தகுதி நீக்கம் செய்திருக்க வேண்டும்.


வேலூர் தொகுதியில் எங்களுடைய வேட்பாளர் தேர்தல் ஆணையம் விதித்த செலவுத் தொகையை விட குறைவாக தான் செலவு செய்துள்ளனர். மீண்டும் அந்த தொகையை திருப்பித் தருவார்களா? “ என கேள்வி எழுப்பினார்.

பின் யார் ஆட்சிக்கு வந்தால் நன்றாக இருக்கும் என்ற கேள்விக்கு ”மோடி அல்லது ராகுல் யார் ஆட்சிக்கு வந்தாலும் எந்தவித மாற்றம் நடைபெறுவதில்ல. பொருளாதார கொள்கையில் மாற்றம் தேவை“ என்று பேசினார்.
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 18, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading