அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் - வாக்களித்தபின் ராஜேந்திர பாலாஜி பேட்டி

”தினகரன் நாட்டை கொள்ளையடிப்பதற்காகவே கூட்டத்தை கூட்டியுள்ளார்”

அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் - வாக்களித்தபின் ராஜேந்திர பாலாஜி பேட்டி
ராஜேந்திர பாலாஜி
  • News18
  • Last Updated: April 18, 2019, 11:20 AM IST
  • Share this:
தினகரன் நாட்டை கொள்ளையடிப்பதற்காகவே கூட்டத்தை கூட்டியுள்ளார் என்றும், ஸ்டாலினிற்கு மக்கள் நலனில் அக்கறை இல்லை என்றும் அமைச்சர் ரஜேந்திர பாலாஜி வாக்களித்தபின் செய்தியாளர் சந்திப்பில் குற்றம் சாட்டியுள்ளார். 

திருத்தங்கலில் உள்ள KMK மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனது வாக்கை பதிவு செய்தார். பின் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது, " அதிமுக கூட்டணி அமோக வெற்றி பெறும். தமிழ்நாட்டில் அதிமுக அலை வீசுகிறது மக்கள் எழுச்சி வாக்களித்து வருகிறார்கள்" என்று கூறினார்.


தமிழகத்தில் பணப்புழக்கம் அதிகமாக உள்ளது என்ற கேள்வி எழுப்பியபோது “பொருளாதாரத்தில் முன்னேறிக் கொண்டிருக்கிறது என்று அர்த்தம். தேர்தலுக்காக மக்களுக்கு பணம் கொடுக்கப்படுகிறது.  தேர்தல் ஆணையம் பணம் கொடுப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது “ எனபதிலளித்தார்.

அதைத்தொடர்ந்து அமமுக மீது மட்டும் அரசுக்கு எதிர்ப்பு அதிகரித்துள்ளதா? என்ற கேள்விக்கு ”அமமுக, திமுக மீது மக்களுக்கு எதிர்ப்பு உள்ளது. தினகரன் நாட்டை கொள்ளையடிப்பதற்காகவே கூட்டத்தை கூட்டியுள்ளார்.

அதற்காகவே இருவரும் ஆட்சிக்கு வர துடிக்கின்றனர். ஆட்சியை மத்தியிலும் மாநிலத்திலும் கவிழ்ப்பேன் என திரிகிறார். பிரசாரத்தில் ஸ்டாலின் குணாதிசியம் தெரிந்தது. அவருக்கு மக்கள் நலனில் அக்கறை இல்லை. ஆதலால், மீண்டும் மோடியே  பிரதமராக வருவார் “ எனக் கூறினார்.


தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 18, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading