நாட்டில் பல விதமான ஓட்டை இருக்கிறது... நல்ல விஷயங்களை பார்க்க வேண்டும் - சத்குரு

”ஜனங்கள் தான் ஜனநாயகம் என்பதை மக்கள் அனைவரும் உணர்ந்து வாக்களிக்க வேண்டும்”

நாட்டில் பல விதமான ஓட்டை இருக்கிறது... நல்ல விஷயங்களை பார்க்க வேண்டும் - சத்குரு
ஜக்கி வாசுதேவ்
  • News18
  • Last Updated: April 18, 2019, 1:43 PM IST
  • Share this:
பொள்ளாச்சி மக்களவை தொகுதிக்குட்பட்ட முட்டத்துவயல் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளியில் வாக்களித்த பின் சத்குரு செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அப்போது,  “சாமானிய மக்கள் யார் நம்மை ஆள வேண்டும் என்பதை நிர்ணயிக்க முடியும் காலகட்டம் இது. மக்கள் அனைவரும் பொறுப்பை உணர்ந்து கடைபிடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.  நாட்டின் முன்னேற்றம், நாட்டின் எதிர்காலம், அடுத்த தலைமுறையின் எதிர்காலம் நம் கையில் இருப்பதை உணர்ந்து நடக்க வேண்டும் “என்று பேசினார்.

மேலும் அவர் ”உலக அளவில் இவ்வளவு பெரிய தேர்தல் நடந்ததில்லை. சின்ன சின்ன குறைகள் இருக்கலம். 4 பேர் இருந்தாலும் வீட்டில் குறைகள் இருக்கும். அதனால் சின்ன சின்ன குறைகளில் கவனம் செலுத்தாமல், 120 கோடியில் 90 கோடி மக்கள் வாக்களிப்பது  மகத்தான விஷயம். உலகமே பார்த்து வரும் இந்த தேர்தலில் குறை பார்ப்பதை விட்டுவிட்டு  பெருமை பட வேண்டிய விஷயமாகப் பாருங்கள்.


இளைஞர்கள் அதிகளவில் வாக்களிக்க முன் வந்துள்ளதால் ஜாதி, மத பேதம் தன்மை குறைந்து வருவதாக நினைக்கிறேன்.

நமக்கு யார் தேவையோ; அவர்களை ஜனநாயக அடிப்படையில் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு வாக்களிப்பதன் மூலம் கிடைத்துள்ளது. பிரச்னையின் போது புகார் கூறுகிறோம். அந்த உரிமைக்காக வாக்களிக்க வேண்டும்.

நாட்டில் பல விதமான ஓட்டை இருக்கிறது. ஆனால் நல்ல விஷயங்களை பார்க்க வேண்டும். பணம் வாங்குவது தவறு தான். இனிமேல் யாரும் வாங்காமல் ஜனங்கள் தான் ஜனநாயகம் என்பதை மக்கள் அனைவரும் உணர்ந்து வாக்களிக்க வேண்டும்” எனப் பேசினார்.இதையும் படிக்க : சாதி , மதம், பணத்தை நோக்கமாக வைத்து ஓட்டு போடாதீர்கள் - சத்குரு
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 18, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading