வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் நடிகர் சிவகார்த்திக்கேயன் வாக்களிக்கவில்லை...!

நடிகர் ரமேஷ் கண்ணாவிற்கும் ஓட்டு சீட்டு இல்லாததால் திருப்பி அனுப்பபட்டார். நடிகர் ரோபோ ஷங்கருக்கும் தன்னுடைய வாக்காளர் அடையாள அட்டையில் பிரச்னை என்பதால் வாக்களிக்கவில்லை.

வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் நடிகர் சிவகார்த்திக்கேயன் வாக்களிக்கவில்லை...!
சிவகார்த்திகேயன்
  • News18
  • Last Updated: April 18, 2019, 11:44 AM IST
  • Share this:
தேர்தல் நாளான இன்று தமிழகம் முழுவதும் வாக்காளர்கள் தங்களுடைய வாக்குச் சாவடிகளில் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். 

தமிழகத்தில் வேலூர் நீங்களாக 38 மக்களவை தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடக்கிறது. மேலும், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடக்கிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு அமைதியாக நடந்து வருகிறது.

படிக்க... கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை தமிழகம் வந்து ஓட்டு போட்டாரா... உண்மை என்ன?


அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் ஆர்வமாக வந்து தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். நடிகர் அஜித் திருவான்மியூரில் ஓட்டு பதிவு செய்தார். நடிகர் விஜய், நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் மக்களோடு, மக்களாக வரிசையில் நின்று வாக்களித்தார்.

இந்நிலையில், வளசரவாக்கம் குட்சஷெப்பர்ட் பள்ளியில் வாக்களிக்க நடிகர் சிவகார்த்திகேயனின் மனைவி ஆர்த்தி வந்தார்.

வாக்காளர் பட்டியலில் சிவகார்த்திகேயன் பெயர் இல்லாததால், அவர் வரவில்லை என்று கூறப்படுகிறது.


நேற்று, தனது ட்விட்டர் பக்கத்தில் அனைவரும் தவறாமல் வாக்களிப்போம் என்று அவர் பதிவிட்டிருந்தார்.

இதே போல் நடிகர் ரமேஷ் கண்ணாவிற்கும் ஓட்டு சீட்டு இல்லாததால் திருப்பி அனுப்பபட்டார். நடிகர் ரோபோ ஷங்கருக்கும் தன்னுடைய வாக்காளர் அடையாள அட்டையில் பிரச்னை என்பதால் வாக்களிக்கவில்லை.

வரிசையில் நின்று வாக்களித்த விஜய்...






தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



First published: April 18, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading