ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

எஸ்.டி பட்டியலில் நரிக்குறவர், குருவிக்காரன் இனங்களை சேர்க்கும் மசோதா நிறைவேற்றம்

எஸ்.டி பட்டியலில் நரிக்குறவர், குருவிக்காரன் இனங்களை சேர்க்கும் மசோதா நிறைவேற்றம்

மசோதாவை மக்களவையில் நிறைவேற்றிய  பழங்குடியினர் நலத்துறை மந்திரி அர்ஜூன் முண்டா

மசோதாவை மக்களவையில் நிறைவேற்றிய பழங்குடியினர் நலத்துறை மந்திரி அர்ஜூன் முண்டா

தமிழகத்தில் உள்ள நரிக்குறவர், குருவிக்காரர் உள்ளிட்ட சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க இந்த மசோதா வகை செய்கிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ்நாட்டில் உள்ள நரிக்குறவர், குருவிக்காரர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கும் அரசியல் சாசன திருத்த மசோதா மக்களவையில் நிறைவேறியது.

பழங்குடியினர் அரசியல் சாசன திருத்த மசோதாவை, பழங்குடியினர் நலத்துறை மந்திரி அர்ஜூன் முண்டா மக்களவையில் நேற்று முன்தினம் அறிமுகம் செய்தார். இந்த மசோதா மீது இன்று விவாதம் நடத்தப்பட்டது. விவாதத்திற்கு பிறகு இந்த மசோதா இன்று நிறைவேற்றப்பட்டது.

இதையும் படிங்க: பாப் இசை, ராக் இசை என எதுவாக இருந்தாலும் தமிழில் இருக்க வேண்டும் : முதல்வர் ஸ்டாலின்

தமிழகத்தில் உள்ள நரிக்குறவர், குருவிக்காரர் உள்ளிட்ட சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க இந்த மசோதா வகை செய்கிறது. முன்னதாக இந்த மசோதா மீது பேசிய திமுக எம்.பி செந்தில் குமார், தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் லம்பாடி உள்ளிட்ட பெயர்களில் உள்ளவர்களையும் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.

First published:

Tags: Lok sabha