ராகுல் காந்தி பிரதமரானால் தமிழகம் பாலைவனமாகிவிடும் - எடப்பாடி பழனிசாமி பிரசாரம்

தான் ஒரு விவசாயி என்று கூறி, விவசாயிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொச்சைப்படுத்தி வருவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

ராகுல் காந்தி பிரதமரானால் தமிழகம் பாலைவனமாகிவிடும் - எடப்பாடி பழனிசாமி பிரசாரம்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை
  • News18
  • Last Updated: April 13, 2019, 8:18 AM IST
  • Share this:
ராகுல் காந்தி பிரதமரானால் தமிழகம் பாலைவனமாகிவிடும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

சேலம் தொகுதி அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று பிரசாரம் மேற்கொண்டார்.

எடப்பாடி பகுதியில் பொதுமக்கள் மத்தியில் பேசிய அவர், கர்நாடகாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, மேகதாது அணை கட்டப்படும் என்றும், காவிரி மேலாண்மை ஆணையம் கலைக்கப்படும் என்றும் வாக்குறுதி அளித்ததாக கூறினார். இதன்மூலம், ஸ்டாலினால் அறிவிக்கப்பட்ட ராகுல் காந்தி பிரதமரானால், தமிழகம் பாலைவனமாகிவிடும் என்று முதலமைச்சர் குற்றம்சாட்டினார்.


மு.க.ஸ்டாலின் பரப்புரை

இதனிடையே, மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் ராமலிங்கத்தை ஆதரித்து அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது அவர், தான் ஒரு விவசாயி என்று கூறி, விவசாயிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொச்சைப்படுத்தி வருவதாக குற்றம்சாட்டினார். விவசாயிகளுக்காக எடப்பாடி பழனிசாமி என்ன செய்தார் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.முன்னதாக சிதம்பரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சிதம்பரம் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் திருமாவளவனை ஆதரித்து ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர், தாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் ஜெயலலிதா மரணம், கோடநாடு விவகாரம், பொள்ளாச்சி சம்பவம் ஆகியவை குறித்து விசாரணை நடத்தப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார்.

நரேந்திர மோடி டீ விற்றதை கேவலமாக தாங்கள் கருதவில்லை என்றும், டீ விற்றவர் தற்போது பெரிய கார்பரேட் நிறுவனங்களுக்கு துணையாக நிற்பது ஏன் என்றே கேள்வி எழுப்புவதாகவும் மு.க.ஸ்டாலின் கூறினார்.

Also see... மேகதாது அணை கட்ட ராகுல் ஆதரவு - முதல்வர் பழனிசாமி குற்றசாட்டு


Also see... அ.தி.மு.க தொண்டர்களுக்கு கடிதம் எழுதிய ஓபிஎஸ், இபிஎஸ்


Also see...
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 13, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading