• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • எதிர்க்கட்சிகளின் கையில் நாட்டை கொடுத்தால் நாடு சீரழிந்து விடும்: முதலமைச்சர்

எதிர்க்கட்சிகளின் கையில் நாட்டை கொடுத்தால் நாடு சீரழிந்து விடும்: முதலமைச்சர்

முதலமைச்சர் பழனிச்சாமி

முதலமைச்சர் பழனிச்சாமி

மக்களவைத் தேர்தலோடு சட்டமன்ற இடைத் தேர்தலும் நடைபெற துரோகிகள் சிலரே காரணம் என்று கன்னியாகுமரியில் நடந்த பொதுக்கூட்டத்தில் முதல்வர் கூறினார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
பிரதமர் வேட்பாளர் யார் என்று கூற முடியாத எதிர்க்கட்சிகளின் கையில் நாட்டை கொடுத்தால் நாடு சீரழிந்து விடும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளரான மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை ஆதரித்து நாகர்கோவில், தோவாளை ஆகிய இடங்களில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை செய்தார். திறமையான மோடி மீண்டும் பிரதமராக வர வேண்டும் என்றும் அதற்கு அதிமுக-பாஜக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் கேட்டுக் கொண்டார்.

எதிர்க்கட்சிகளில் பிரதமர் வேட்பாளர் யார் என்று கூற முடியாத நிலையில் எப்படி பிரதமரை தேர்ந்தெடுப்பார்கள் என முதலமைச்சர் கேள்வி எழுப்பினார். மேலும் இவர்கள் கையில் நாட்டை கொடுத்தால் சீரழிந்து விடும் என்று கூறினார். மக்களவைத் தேர்தலோடு சட்டமன்ற இடைத் தேர்தலும் நடைபெற துரோகிகள் சிலரே காரணம் என்றும் அவர் சாடினார்.

ஓ.பன்னீர்செல்வம்: திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் எம்.எஸ்.எம்.ஆனந்தனை ஆதரித்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திருப்பூரில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ஒன்றரை கோடி தொண்டர்களை கொண்ட அதிமுகவை கருணாநிதியாலேயே அழிக்க முடியாத நிலையில் ஸ்டாலினால் ஒன்றும் செய்ய முடியாது என்று கூறினார்

தொடர்ந்து பேசிய ஓ. பன்னீர்செல்வம், முதலமைச்சராக ஸ்டாலின் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டார் என்றும், ஆனால் அவரால் முதலமைச்சராக முடியாது என்றும் கூறினார்.

முன்னதாக ஓ. பன்னீர்செல்வம் பேசுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்ட மேடையில் அதிமுகவினர் சிறுமிகளை நடனமாட வைத்தனர். அப்போது கூட்டத்தில் இருந்த சில பெண்களும் நடனமாடினர்.

பிரேமலதா விஜயகாந்த்: மயிலாடுதுறை தொகுதி அதிமுக வேட்பாளர் ஆசைமணியை ஆதரித்து, தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் எத்தனை பாலியல் வன்கொடுமைகள் நடந்தாலும் பரவாயில்லை என்று அவர் பேசினார். அதனால் கூட்டத்தினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.

பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி: அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் ஏ.கே.மூர்த்தியை ஆதரித்து பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி முத்துக்கடை பேருந்து நிலையம் அருகே பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், இந்த தேர்தல் அதிமுகவு-க்கும் திமுகவு-க்குமான தேர்தல் இல்லை என்றும், பாமகவு-க்கும் திமுகவு-க்குமான தேர்தல் என்றும் கூறினார்.

ஜி.கே.வாசன்: நெல்லை மாவட்டம் வள்ளியூரில் அதிமுக வேட்பாளர் மனோஜ் பாண்டியனுக்காக வாக்கு சேகரித்த தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், தமிழகத்தில் ஒன்பது தொகுதிகளை பெற்ற காங்கிரஸ் ஒரு தொகுதியில் கூட சிறுபான்மை வேட்பாளர்களை நிறுத்தவில்லை என்றும், அதனால் சிறுபான்மையினரின் நலன் குறித்து பேச அவர்களுக்கு தகுதியில்லை என்றும் கூறினார்.

Also read... தலைகீழாக நின்றாலும் தமிழகத்தில் தாமரை மலரவே மலராது: மு.க.ஸ்டாலின் 

போலி அறிக்கையைத் தாக்கல்செய்த தேர்வாணையம்! உயர் நீதிமன்ற நீதிபதிகள் கடும் கண்டனம்  

அகிலேஷ்க்கு நடிகர்: சோனியாவுக்கு முன்னாள் காங்கிரஸ் நிர்வாகி - பாஜகவின் மாஸ்டர் பிளான்

Also see... இந்தியாவில் வேலை செய்ய ஏற்ற டாப் 25 நிறுவனங்கள்!

Also Read...




தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.





POINTS TABLE:


ORANGE CAP:


PURPLE CAP:


RESULTS TABLE:

ன்ஃப்க்ஹ்ன்hgdfghg

SCHEDULE TIME TABLE:

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: