சிறந்த தலைவர் இருந்தால்தான் நல்லாசி தர முடியும் என்றும், திமுக-காங்கிரஸ் கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி ஊழல் கட்சிகள் என்றும் சமத்துவ மக்கள் கட்சி தலைவரும் நடிகருமான சரத்குமார் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தராஜனை ஆதரித்து கோவில்பட்டி அருகே உள்ள காமநாயக்கன்பட்டியில் சமத்துவ மக்கள் கட்சித் தலைவரும் நடிகருமான சரத்குமார் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசுகையில் மத்தியில் நிலையான பெரும்பான்மையான ஆட்சி மலர வேண்டும். காங்கிரஸ் கூட்டணி ஒரு சந்தர்ப்பவாத கூட்டணி. ஊழல் மிகுந்த கட்சி அவர்களுடன் இணைந்து உள்ளது. அவர்களெல்லாம் தனி மனித விமர்சனம் செய்து இந்த தேர்தலை சந்திக்கிறார்கள் என்று தெரிவித்தார்.
மக்களுக்காக நான் என்ற முறையிலே சிறந்த முறையில் மாநிலத்தை முதன்மை மாநிலமாக உருவாக்கிய மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவரின் கனவை நினைவாக்க, மத்தியில் நிலையான ஆட்சி நியமான ஆட்சி நேர்மையான ஆட்சி மோடி தலைமையில் அமைவதற்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
ராகுல்காந்தி மோடியை காவல்காரன் என்று கூறியிருக்கிறார். மோடி நாட்டுக்கு காவல்காரர்தான். சிறந்த தலைவர் இருந்தால்தான் நல்லாட்சி தர முடியும் என்றார். மேலும் மத்தியில் பெரும்பான்மை ஆட்சி அமையும் போதுதான் மாநிலத்தில் நமக்கு தேவைப்படும் நிதிகளையும் திட்டங்களையும் செயல்படுத்தும் முடியும் என்று பேசினார்.
Also see... நான் ஊழல் குற்றச்சாட்டு இல்லாத நேர்மையான அரசியல்வாதி - தமிழிசை
Also see...
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.