வெறுப்பு அரசியலால் தமிழகத்தை ஆள முடியாது- கிருஷ்ணகிரியில் ராகுல் பிரசாரம்

நாட்டின் பன்முக தன்மையை பாதுகாக்கவே காங்கிரசும், திமுகவும் இணைந்து மோடியை எதிர்ப்பதாக ராகுல் கூறினார்.

Web Desk | news18
Updated: April 12, 2019, 6:33 PM IST
வெறுப்பு அரசியலால் தமிழகத்தை ஆள முடியாது- கிருஷ்ணகிரியில் ராகுல் பிரசாரம்
ராகுல் காந்தி
Web Desk | news18
Updated: April 12, 2019, 6:33 PM IST
வெறுப்பு அரசியல் மூலம் தமிழகத்தை ஆட்சி செய்ய முடியாது என்றும் அன்பால் மட்டுமே ஆள முடியும் என்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளார்.

கிருஷ்ணகிரியில் காங்கிரஸ் வேட்பாளர் செல்லகுமார், தருமபுரி மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் செந்தில்குமார் மற்றும் ஒசூர், அரூர், பாப்பிரெட்டிபட்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பிரசாரம் செய்தார்.

அப்போது, நாட்டின் பன்முக தன்மையை பாதுகாக்கவே காங்கிரசும், திமுகவும் இணைந்து மோடியை எதிர்ப்பதாக கூறினார். தமது ஒரே சிந்தனையை அனைவரும் கேட்க வெண்டுமென பிரதமர் மோடி நினைப்பதாகவும், ஆனால் கோடிக்கணக்கான மக்களின் சிந்தனைதான் இந்தியாவை வழிநடத்துகிறது என்றும் ராகுல்காந்தி குறிப்பிட்டார்.

தமிழர்களின் வரலாறு, கலாசாரத்தை தாம் அறிந்து வைத்திருப்பதாக கூறிய அவர், தமிழர்களின் வரலாற்றை படித்துப் பார்த்தால் அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்த முடியாது என்பது தெரியவரும் என்று கூறினார்.

வெறுப்பு அரசியல் மூலம் தமிழகத்தை ஆள முடியாது என்றும் அன்பால் மட்டுமே ஆள முடியும் என்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்தார்.
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.

Also Watch
First published: April 12, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...