துண்டு அணிந்து வாக்களிக்க சென்றவர்களை அனுமதிக்காத துணை ராணுவ வீரர்!

துண்டு அணிந்த அனைவரையும் அவர் உள்ளே விடாமல் தடுத்துள்ளார். இதனால், அங்கு வாக்குவாதம் ஏற்பட்டது.

news18
Updated: April 18, 2019, 1:41 PM IST
துண்டு அணிந்து வாக்களிக்க சென்றவர்களை அனுமதிக்காத துணை ராணுவ வீரர்!
கருப்பு துண்டு அணிந்ததால் அனுமதிக்க மறுக்கப்பட்ட நபர்
news18
Updated: April 18, 2019, 1:41 PM IST
திருச்சி மாவட்டத்தில் உள்ள குழுமணி வாக்குச்சாவடியில் துண்டு அணிந்து வாக்களிக்க சென்றவரை துணை ராணுவ வீரர் உள்ளே அனுமதிக்காத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழகம் முழுவதும் வேலூர் தொகுதி தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் அமைதியாக நடந்து வருகிறது.

திருச்சி மாவட்டம் குழுமணியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்கச் வழக்கமாக அணியும் கருப்பு துண்டு அணிந்து சென்ற ராஜா என்பவரை பாதுகாப்பு பணியில் இருந்த துணை ராணுவ வீரர் தடுத்துள்ளார்.


மேலும், துண்டு அணிந்த அனைவரையும் அவர் உள்ளே விடாமல் தடுத்துள்ளார். இதனால், அங்கு வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னர், உள்ளூர் போலீசார் சமாதானம் செய்து துண்டு அணிந்தே அவர்களை வாக்களிக்க அனுமதித்தனர். இதனால், அங்கு சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Loading...

தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

First published: April 18, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...