முகப்பு /செய்தி /தமிழ்நாடு / சித்திரைத் திருவிழா அன்று தேர்தல்...! மாற்று ஏற்பாடு குறித்து மதுரை ஆட்சியர் விளக்கம்

சித்திரைத் திருவிழா அன்று தேர்தல்...! மாற்று ஏற்பாடு குறித்து மதுரை ஆட்சியர் விளக்கம்

மாவட்ட ஆட்சியர் தலைமையில் இன்று நடந்த கூட்டத்தில் பாதுகாப்பு பணியிலும் சிக்கல் ஏற்படும் என்று காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

மதுரையில் சித்திரைத்திருவிழா அன்று மக்களவை தேர்தல் நடக்க இருப்பதால், தேர்தலை மாற்றிவைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழகத்தின் பிரசித்தி பெற்ற திருவிழாக்களில் ஒன்றான மதுரை சித்திரைத் திருவிழா ஏப்ரல் 18-ம் தேதி நடக்க உள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் ஏப்ரல் 18-ம் தேதி மக்களவை தேர்தல் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சித்திரைத்திருவிழாவின் போது தேர்தல் நடந்தால் அது வாக்குப்பதிவை பாதிக்கும் என்பதாக் தேர்தலை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

இன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடந்த கூட்டத்தில் இது தொடர்பாக அரசியல் கட்சிகள் வலியுறுத்தின. மேலும், பாதுகாப்பு பணியிலும் சிக்கல் ஏற்படும் என்று காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

கூட்டத்தை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர், “உள்ளூர் விடுமுறை குறித்தான தகவல்களை மட்டுமே தேர்தல் ஆணையத்தில் இருந்து கேட்டனர். 12 மணிக்குள் தேரோட்டம் முடிந்து விடும் என்பதால் மாலை கூடுதல் நேரம் வாக்களிக்க அனுமதி தர கோரிக்கை வைத்துள்ளோம்” என்று கூறியுள்ளார்.

Also See...

First published:

Tags: Lok Sabha Election 2019, Lok Sabha Key Constituency