ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

2024 மக்களவை தேர்தலில் யார் தலைமையில் கூட்டணி ? நிர்வாகிகள் கூட்டத்தில் இபிஎஸ் பரபரப்பு பேச்சு!

2024 மக்களவை தேர்தலில் யார் தலைமையில் கூட்டணி ? நிர்வாகிகள் கூட்டத்தில் இபிஎஸ் பரபரப்பு பேச்சு!

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி

நாடாளுமன்றத் தேர்தலுக்கு அதிமுக தலைமையில்தான் மெகா கூட்டணி அமையும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று நடைபெற்றது. அதில், முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் மற்றும் செய்தி தொடர்பாளர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தல் பணிகள், கட்சி வளர்ச்சிப் பணிகள் தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

முன்னதாக பேசிய முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் ஓ.பன்னீர்செல்வத்தை கடுமையாக விமர்சித்தனர். தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளைத் தொடங்க மாவட்டச் செயலாளர்களுக்கு உத்தரவிட்டார்.

மேலும் அவர் பேசுகையில், கூட்டணி பேச்சுவார்த்தையை தலைமை பார்த்துக்கொள்ளும். அதிமுக தலைமையில்தான் மெகா கூட்டணி என்பதில் உறுதியாக இருக்கிறோம், வாக்குச்சாவடி அளவில் கட்சியைப் பலப்படுத்த வேண்டும். திமுகவின் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளித்து நேரத்தை வீணாக்காமல், மக்கள் பணிகளில் கவனம் செலுத்துங்கள் என்று அறிவுறுத்தினார்.

சட்டப்போராட்டங்கள் குறித்து கவலை கொள்ளாமல் கட்சிப் பணிகளில் கவனம் செலுத்துங்கள் என்றும் குறிப்பிட்ட அவர், தொண்டர்களும் நிர்வாகிகளும் உறுதியாக இருந்தால் எதிராளிகளை வீழ்த்திவிடலாம் எனவும் பேசினார்.

First published:

Tags: AIADMK Alliance, Edappadi Palaniswami